என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide attempt"

    • கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன்.
    • நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் திடீரென சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 23). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் திடீரென சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதைக் கண்ட அவரது சகோதரர் பூபாலன், உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தினேஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தினேஷ்குமார் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஜோஸ்வின் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா?

    கடலூர்:

    கடலூர் சாவடியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜோஸ்வின் (வயது 42). இவர் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஜோஸ்வின் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ஜோஸ்வினுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக விடுமுறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 18-ந் தேதி முதல் மீண்டும் மருத்துவ விடுப்பு நீடிக்க வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுப்பு தரவில்லை என கூறப்படு கிறது. இதன் காரணமாக ஜோஸ்வின் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.
    • காதலியை சமாதானம் செய்வதற்காக தொடர்பு கொண்டார்

    கோவை,

    தேனியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் ஜெயா விஷ்ணு (வயது 22). இவர் கோவை மலுமிச்சம் பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஜெயா விஷ்ணு நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அந்த மாணவி பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தூங்கி விட்டார்.

    ஆனால் ஜெயா விஷ்ணு தனது காதலியை சமாதானம் செய்வதற்காக தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயா விஷ்ணு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விடுதியில் தூக்கு போட்டு தொங்கினார்.

    இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார்.

    கோவை

    சேலத்தை சேர்ந்த 21 வயது மாணவி. இவர் நெல்லையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அப்போது அதே கல்லூரியில் படித்த மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுதத்து அவர்கள் மாணவியை நெல்லை அண்ணா பல்கலை கழகத்தில் இருந்து மாறுதல் பெற்று கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தனர். பெற்றோர் காதலை பிரித்ததால் மாணவி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கினார்.இதனை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மாணவி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மன உளைச்சலில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 38). இவர் மின்னல் கிராமத்தின் வி.ஏ.ஓ. ஆக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யும்போது அது வேறு ஒருவரின் பெயருக்கு மாறி உள்ளது.

    சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் இது சம்பந்தமாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முகமது இலியாஸிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பட்டாவை மாறுதல் செய்து கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் முகமது இலியாஸ் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென்று பாத்ரூமில் சத்தம் கேட்டது.

    அப்போது அக்கம்பக்க த்தனர் ஓடிச் சென்று பார்த்தபோது இலியாஸ் கழுத்தை அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இலியாசை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இலியாஸ் எதற்காக தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியப்பன் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதால் பாக்கியகோமதி தனது தாய் வீட்டில் மகனுடன் இருந்து வருகிறார்.
    • தாய் மற்றும் அவரது மகள் பாக்கியகோமதி இருவருமே பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேர்மன். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த 1 வருடத்திற்கு முன்பு இவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி ஞானபாக்கியம்(வயது 65). இவர்களுக்கு பாக்கியகோமதி (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு வேடசந்தூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 7 வயதில் முத்து செல்வகோமு என்ற ஒரு மகன் உள்ளார்.

    மாரியப்பன் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளதால் பாக்கியகோமதி தனது தாய் வீட்டில் மகனுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தாய் மற்றும் அவரது மகள் பாக்கியகோமதி இருவருமே பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். நேற்று இருவருக்கும் நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். இதற்கிடையே இன்று காலை எழுந்து பார்த்தபோது சேர்மன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் ஞானபாக்கியம், பாக்கியகோமதி, அவரது மகன் முத்து செல்வகோமு ஆகிய மூவரும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

    உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் பகுதியில் தங்கியிருந்து, மருத்துவமனைக்கு காரில் வந்து செல்வது வழக்கம்.
    • 60 மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழிவர்மா. இவரது மகள் பேபி லில்லி (வயது 29 ). அரசு மருத்துவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

    இவர் சேலம் பகுதியில் தங்கியிருந்து, மருத்துவமனைக்கு காரில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த பேபிலில்லி, மாலை 3 மணியளவில் அவரது அறையில் தனியாக இருந்தபோது, அங்கு இருந்த 60 மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    60 மாத்திரைகளை சாப்பிட்டதன் காரணமாக அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் பணியில் இருந்தவர்கள், டாக்டர் பேபி லலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவமனையில் வேலைச் சுமை அதிகமாக இருந்ததாகவும், அதனால் அவர் விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளைய போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
    • வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சீனிவாசன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் தென்காசி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் மற்றொரு வாலிபரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

    தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தெற்கு வெங்காநல்லூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சக்தி கருப்பசாமி (வயது 23) என தெரியவந்தது.

    அந்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் இருக்கவைத்து விட்டு அவர்கள் மீண்டும் ரோந்துப் பணிக்கு சென்றனர். அப்போது அங்கு ரமேஷ் என்ற காவலர் மட்டும் எழுத்தர் அறையில் இருந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் சக்தி கருப்பசாமி தனது கழுத்தில் அணிந்திருந்த டாலரில் வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து கழுத்து, மார்பு, கைகளில் கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்ட காவலர் ரமேஷ் ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது கத்தியை வைத்து மேலும் கிழித்துக்கொள்ள அந்த வாலிபர் முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த ரமேஷ், அவரை தடுத்து அவர் கையிலிருந்த கத்தியை பிடுங்கிவைத்து வாலிபரை எச்சரித்து அமரவைத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிவகாசி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயன்றுள்ளார்.
    • மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தேவி (வயது 20). கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    இது தொடர்ந்து நீடிக்கவே கடந்த 2-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ராஜ்குமார், தேவியை வர வழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் ராஜ்குமார் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தேவி சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தேவி அழுது கொண்டே புகார்களை கூறினார். அப்போது அவரது நடவடிக் கையில் மாற்றம் இருந்தது. பேசி கொண்டிருந்தபோது தேவி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தட்டி எழுப்பி கேட்டபோது, வலிப்பு மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு விட்டதாக தெரி வித்தார். இதையடுத்து தேவியை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடன்தொல்லை காரணமாக சரவணன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது45). விவசாயியான இவர் நெல்அறுவடை எந்திரம் வைத்தும் தொழில் செய்து வருகிறார்.

    இவரது மனைவி கீதா(40). இவர்களது 2-வது மகள் இந்துஜா (16). பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் சரவணன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு திடீரென சரவணன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் குடும்பத்துடன் விஷம் குடித்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் அக்கம்பக்கத்தினருடன் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் சரவணன், கீதா, அவர்களது மகள் இந்துஜா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் சரவணன் குடும்பத்துடன் விஷம் குடித்து இருப்பது தெரிந்தது. வீட்டின் மற்றொரு அறையில் மூத்தமகள் தனியாக இருந்ததால் அவர் தப்பி இருக்கிறார்.

    கடன்தொல்லை காரணமாக சரவணன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி அருகே மனைவியின் நடத்தை சந்தேகத்தால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்
    • இதுகுறித்து வாத்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமம் குழித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு மகன் துரைராஜ் (வயது 31). இவர் சொந்தமாக டாட்டா ஏசி வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் துரைராஜ் மனைவியின் நடத்தையில் சந்தேகபட்டு தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த துரைராஜ் மனைவியிடம் தகறாறில் ஈடுபட்டார்.

    இதில் வாக்குவாதம் முற்றவே மனமுடைந்த துரைராஜ் மண்ணெண்னையை உடல் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருக்கு 50 சதவீதம் காயம் ஏற்பட்டது. கழுத்து மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.
    • நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சி 24-வது வார்டுக்கு உப்பட்ட, ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில், சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டி இருப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து இன்று நகராட்சி பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அளவீடு செய்து, ஜே.சி.பி வாகனங்கள் மூலம், அங்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள குடியிருப்புகளை இடித்து அகற்ற முற்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் சித்ரா (37), பெருமாயி (57), பத்மா (23), அமுதா (33) ஆகிய 4 பெண்கள் திடீரென தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆவேசமாக அப்பகுதியில் ஓடி வந்தனர். இதனால், அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது.

    சமாதான பேச்சுவார்த்தை

    இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதுடன், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த எடப்பாடி தாசில்தார் லெனின் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்பு வாசிகளிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×