என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோதி"
- வெளியுறவுத்துறை மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
- அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.
நாகர்கோவில்:
விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 12 மீனவர்கள் கடந்த 11-ந்தேதியன்று மாலத்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டின் இழுவை கப்பல் மீன வர்களின் படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் படகு மற்றும் அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் கடலில் முழ்கின. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் அனைவரும் உயிர்தப்பி கப்பல் மூலம் மாலத்தீவுக்கு சென்றனர்.
அந்நாட்டு அரசு அவர்களை கைது செய்தது. பின்னர் அவர்களை விடுவிக்க இந்திய தூதரகத்தை நான் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டேன். மீனவர்கள் தாயகம் திரும்பி வரவும் நடவடிக்கை எடுத்தேன். பின்னர் ஊர் திரும்பிய மீனவர்களை சந்தித்து அவர்கள் கோரிகை் கையை கேட்டறிந்தேன். அப்போது சேதம் அடைந்த படகு உள்பட ரூ.1½ கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நான் நேற்று டெல்லி சென்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தேன். அப்போது மாலத்தீவு கப்பல் மோதி படகு விபத்துக் குள்ளான மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.
இதுதொடர்பாக மாலத்தீவு அரசை தொடர்பு கொண்டு நிறுவனத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்.
- மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் நல்லூர் அருகே நல்லியாம் பாளையம் காட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மாட்டுத் தீவனம் வாங்கு வதற்காக வீட்டில் இருந்து கந்தம்பாளையம் பகுதிக்கு திருச்செங்கோடு- பரமத்தி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அதிவேகமாக வந்த கார்
அப்போது அந்தப் பகு
தியில் உள்ள ஒரு பெட்ரோல்
பங்கில் பெட்ரோல் போடு வதற்காக திரும்பியபோது பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி அதிவேகமாக வந்த கார் ரத்தினம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரத்தினம் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தினம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கைது
இதுகுறித்து ரத்தினத்தின் மனைவி வசந்தி(54) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்செங்கோடு அருகே ஆலாங்குறைகாடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார்.
- நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி பஸ் நிலையத்தில் செந்தில்ராஜா (41) என்பவர் சலூன் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் நங்கவள்ளி பஸ் நிலைய பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது நாமக்கல் மாவட்டம் வேலூரில் இருந்து மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் செந்தில்ராஜா மீது மோதியது. இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி செந்தில்ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நங்கவள்ளி போலீசார் செந்தில்ராஜா உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ்சை பறிமுதல் செய்தனர். மேலும் பஸ்சை ஓட்டி வந்த எடப்பாடி அருகே இருப்பாலியை சேர்ந்த டிரைவர் கண்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார்.
- அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (50), தொழிலாளியான இவர் நேற்றிரவு சில்லி சிக்கன் வாங்குவதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சத்யமூர்த்தி (32) என்பவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவ ரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார். சத்யமூர்த்தி லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
- கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.
கொல்லிமலை:
ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
கொண்டை ஊசி வளைவு
சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
சிகிச்சை
விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ
சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.
- சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின.
வெள்ளகோவில்:
காங்கயத்தில் இருந்து வெள்ளகோவில் நோக்கி நேற்று ஒரு டிப்பர் லாரி கோவை - திருச்சி ரோட்டில் காங்கேயம் அருகே உள்ள கொழுஞ்சிகாட்டு வலசு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நூல் மில் சுற்றுச்சுவர் மீது மோதியது.இதனால் சுற்றுச்சுவர் சேதமாகின.
சுற்றுச்சுவரையொட்டி மில் வளாகத்துக்குள் நிறுத்தி இருந்த 4 பைக் சேதமாகின. சுற்றுச்சுவர் அருகே உள்ள வாட்ச்மேன் அறையில் பணியில் இருந்த ராம்பாரத்சமர்பஸ்வன் (வயது 38) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
லாரி ஓட்டி வந்த டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) என்பவருக்கு கால்களில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- டிரைவர் மீது வழக்கு
- நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வாத்தி யார்விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலைக்கு வந்த சதீஷ்குமார் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சதீஷ்குமார் மீது மோதியது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள சாணத்திகல்மேட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சிவகாமி (50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். சிவகாமி இரவு தனது வீட்டின் அருகே ரோட்டை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் எதிர்பாராத விதமாக சிவகாமி மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. அருகில் இருந்தவர்கள் சிவகாமியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அம்மாபேட்டை அருகே பஸ் மீது சுற்றுலா வேன் மோதி சென்னை வாலிபர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாபேட்டை:
சென்னை மணலி ஆண்டாள் குப்பம் பகுதி யை சேர்ந்தவர்கள் ராஜேஸ்குமார் (வயது 26), பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் உள்பட 14 பேர் ஒரு சுற்றுலா வேனில் வெள்ளியங்கிரிக்கு வந்தனர். வேனை சென்னையை சேர்ந்த சந்திர சேகர் ஓட்டி வந்தார்.
அவர்கள் வெள்ளி யங்கிரி சென்று விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் பவானி அருகே அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவி தமாக அந்த வழியாக வந்த அரசு பஸ் மற்றும் சுற்றுலா வேன் மோதி கொண்டது. இதில் ராஜேஸ்குமார், பிரபு, ரூபன் குமார், சந்தோஷ் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பவானியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
பலியான ராஜேஸ்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அம்மா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்