என் மலர்
நீங்கள் தேடியது "கருத்தரங்கு"
- சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
- ‘‘தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்’’ பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "உங்கள் அடையாளத்தை கண்ட றியுங்கள்'' என்ற தலைப்பில் முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான சிறுப்புரை நிகழ்ச்சி நடந்தது.
முதலாம் ஆண்டு மாணவி விக்னேசுவரி வரவேற்றார். ஜமுனா ராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''தலைமை பண்புகள் மற்றும் உறவுகள்'' பயிற்சியாளர் தணிகைவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினர்.
அவர் பேசுகையில், ஒருவர் தனது கையெழுத்தைப் போன்று தனக்கான தனித்துவத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டில் வெற்றிபெற நாம் கவனிக்கப்பட வேண்டும். நினைவில் கொள்ளப்பட வேண்டும். நமக்கான பெயரை உருவாக்க வேண்டும்.
நமக்கென்று ஒரு பெயரை உருவாக்க, நம்மை தனித்து நிற்க வைப்பது எது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அறியப்பட்ட திறனை தாண்டி செல்பவர் எவரோ அவரே வெற்றி பெற முடியும். ஒருவர் சுருக்கமாக ''கேட்கும் கோட்பாட்டில்'' கவனம் செலுத்த வேண்டும். தோற்றம், அறிவாற்றல், தீர்வுகள்,நேர ஒழுக்கம், உற்சாகம், புதுமைகள், உணர்வுகள், பலன்கள். தன்னம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மூலம் சுவாரசியமாக சிறப்புரையாற்றினார்.
முதலாமாண்டு எம்.பி.ஏ. மாணவர் பிரவீன் லிங்கம் நன்றி கூறினார்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
- பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஓசூர் வந்தார்.
- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.
தேன்கனிக்கோட்டை,
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று ஓசூர் வந்தார். அவர் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி மற்றும் தேவகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.
அவருடன் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, தோட்டகலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பூனப்பள்ளி ஊராட்சி யில் சின்னப்பா ரெட்டி என்பவர் தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பில் மானியத்தொகை ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஜெர்பெரா பூ செடி உற்பத்தி செய்யப்பட்டுள்தை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியில் தக்காளி, கேரட் நடவு பணிகளையும், பசுமை குடிலில் ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். பின்னர் தளியில் இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவில் மகளிர்க்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை தூதரக பொது அலுவலர் யார் யசேல், இஸ்ரேல் நாட்டிற்கான தென்இந்திய தூதர் டேம்மி பென் ஹெய்ம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
மேலும், தோட்டக்க லைத்துறை மூலம் பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்நுட்ப கருவிகள், கைவினை பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பல்வேறு வகையான மலர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலவலர்கள் கலந்து கொண்டனர்.
- கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
- இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி, ஐ.பி.ஏ. தென்தமிழக கிளையுடன் இணைந்து 61-வது தேசிய மருந்தியல் வார விழா, சர்வதேச கருத்தரங்கு ''அறிவு காப்புரிமை, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, சவால்கள்'' என்ற தலைப்பில் நடத்தியது. கல்லூரி செயலாளர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார்.
முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். அமெரிக்காவின் வெஸ்பீல்ட், பனகர் காப்புரிமை மைய தலைவர், உமேஷ் வி.பனகர் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டார். எஸ்.ஆர்.எம். மருந்தியல் துறை தலைவர் இளங்கோ, மலேசியாவின் கே.பி.ஜே ஹெல்த்கேர் யுனிவர்சிட்டி பேராசிரியர் அனந்த ராஜகோபால், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவ மருத்துவமனை டீன் சேவியர் செல்வ சுரேஷ் ஆகியோர் பேசினர்.
விவாத நிகழ்வில், எஸ்.லட்சுமண பிரபு, கே.இளங்கோ, கே.அனந்த ராஜகோபால் ஆகியோர் உரையாற்றினர். கலசலிங்கம்,மருந்தாக்கியல் கல்லூரிக்கும், அமெரிக்காவின் அறிவு காப்புரிமை பனகர் மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பல மாநில மாணவர்கள் 250 பேர்கலந்துகொண்டு பயனடைந்தனர்.
- பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் அசோகன் தலைமையில் நடைபெற்றது.
- வங்கியின் உதவியை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று ராயப்பன் விளக்கி பேசினார்.
தூத்துக்குடி:
பனைத் தொழிலாளா்கள் கருத்தரங்கு கூட்டம் தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் அசோகன் தலைமையில் நடைபெற்றது. நற்பணி மன்ற பொருளாளா் தேவதிரவியம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு பனைத்தொழிலாளா் சங்க பொதுச்செயலாளா் ராயப்பன் கலந்து கொண்டு பேசுகையில், தற்போது பனை தொழிலாளர்கள் வங்கியின் உதவியையும் தமிழக அரசின் உதவியையும், எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத் தொழிலாளா்கள் சங்க தலைவா் குளத்தூா் சுப்பிரமணியபுரம் அாிபாகரன், பனைவாாிய உறுப்பினா் எடிசன், ராஜபாளையம் பனை தொழிலாளர் ஜெயராஜ், தருவை குளம் பனை தொழிலாளர் பிச்சையா ஆகியோர் பனையின் வரலாறு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் பேசினர். மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ரேசன் கடையில் சா்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காமராஜா் நற்பணி மன்ற தலைவா் லாரன்ஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
திருப்பூர் :
தேசிய விவசாய தினத்தை (கிசான் திவாஸ்) முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், விவசாய தின கருத்தரங்கு நடந்தது.பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.
இதில் திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் பேசுகையில், உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிச., 23ந் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு, ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது, மனிதனாக பிறந்த நமக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழியாது என்றார்.
- பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடந்தது.
- தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ள ஒருங்கி–ணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் திவ்யா, ஜீவிதா, கீர்த்திகா, கீர்த்திகா, லலிதா ஸ்ரீ, மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வர்யா ஆகியோர் தங்களது ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சியை
தொடங்கினர்.முதற்கட்ட மாக, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோதைநாயகி மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஜான்சி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
இதில் பெத்தநாய்க்கன்–பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படும் தோட்டக்–கலை பயிர்களைப் பற்றியும், தோட்டக்கலை துறையின் நிர்வாக அமைப்பைப் பற்றியும், அதன்கீழ் செயல்ப டுத்தப்படும் பல்வேறு வகையான திட்டங்களைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் ஒருங்கிணைந்த பூச்சி நோய்க் கட்டுப்பாடுகளை பற்றி விளக்கிக் கூறி அதனை விவசாயகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாணவி–களிடம் அறிவுறுத்தினர்.
- இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
- தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது.
ஆறுமுகநேரி:
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது. இதற்கான காரணங்களில் கோபம் மிக முக்கிய ஒன்றாகும். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை கட்டு படுத்தினால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும். உடலை ஆரோக்கிய மானதாக வைத்து கொள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். நீங்களும் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்று கொடுத்து அவர்களை எந்த சூழ்நிலையிலும் பிரச்சி னைகளை தைரியத்துடன் அணுக ஊக்கப்படுத்துங்கள். தோல்வியை கண்டு சோர்வைடையாமல் அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டு என்பதை தெரிந்து கொண்டாலே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முடியும். ஆகவே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையோடு பொது நலத்தையும் கற்றுகொடுத்து வெற்றி யாளர்களாக மாற்றுவது பெற்றோர்களது கடமை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 2000 மரக்கன்றுகளும், மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டன. இதனை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச் செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடை யப்பன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன், திருச்செந்தூர் தொழில்துறை ஆய்வாளர் ஜோதிலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன், தன்னார்வ தொண்டு தனி அலுவலர் ராமச்சந்திரன், பகுதி பொறுப் பாளர்கள் பிரேமா, ஆறுமுகவடிவு, முத்துச்செல்வன், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம உதயம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுந்தேரசன், நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
நாடு முழுவதும் பெண்களுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன் தலைமையிலான இளைஞர்கள் அகிலன், அருண்பிரசாத், உமாசங்கர், திலீப்குமார், தினேஷ் ஆகியோர் கோவையில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக காத்மாண்டு வரை 7000 கி.மீ தூரம், கடந்த 20 நாட்களாக மோட்டார் சைக்கிளின் பேரணி சென்று பிரசாரம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக மீண்டும் கோவை திரும்பிய இக்குழுவினருக்கு, வாழப்பாடி நெஸ்ட் மற்றும் துளி அறக்கட்டளை தன்னார்வலர்கள், காவல் துறையினர் சார்பில் வாழப்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.சி.செல்வம் தலைமையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளித் தலைமையாசரியர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, பயிற்சியாளர் சங்கர்ராஜ் சுப்பிரமணியன், ஜவஹர், சட்டக்கல்லுாரி மாணவி விவேகா, தன்னார்வலர் லோகநாதன் ஆகியோர் இணைய குற்றங்கள் தவிர்ப்பு, இணைய தளம், சமூக ஊடகங்களை பாதுகாப்பாக கையாளும் முறை, சட்டவிதிமுறைகள், சட்ட பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பு செயலி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்கொடுமை தவிர்ப்பு உத்திகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியில் ஆசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.
- திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விலங்கு மேம்பாடு சோதனை குறித்த கருத்தரங்கு நிறைவுபெற்றது
- இதில் திருச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், 25 பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர்.
திருச்சி:
பெங்களூர் இந்திய அறிவியல் அகாடமியின் நிதி உதவி உடன் விலங்கு வளர்ச்சி மற்றும் நோயை புரிந்து கொள்வதற்கான சோதனை மாதிரிகள் குறித்த அறிவியல் அகாடமியின் கருத்தரங்கம் திருச்சி தேசிய கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது.புதுடெல்லி இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அலகாபாத் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸஸ் மற்றும் திருச்சி தேசிய கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை மேற்கண்ட கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
நிறைவு நிகழ்ச்சியில் பெங்களூரு இந்திய அறிவியல் அகாடமியின் ஒருங்கிணைப்பாளரும் சென்னை ஐ.ஐ.டி. பயோ டெக்னாலஜி துறை பேராசிரியருமான டாக்டர் கே. சுப்பிரமணியம் எலிக்கன்ஸை மாதிரி உயிரினமாக பயன்படுத்தி ஸ்டெம் செல் உயிரியலுடன் கூடிய ஆராய்ச்சி நுண்ணறிவுகள் குறித்து பேசினார்.பெங்களூர் ஜே.என்.சி.ஏ. எஸ்.ஆரின் நரம்பியல் பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் ரவி மஞ்சுதயா மனிதர்களில் தன் இயக்கியவியல் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கே. குமார் தலைமை தாங்கினார். திருச்சி தேசிய கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை உதவி பேராசிரியர் டி. கந்தசாமி வரவேற்றார் .
இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினரும் டாடா மரபியல் மற்றும் சமூகத்தின் இயக்குனராகவும் இருக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நிறைவுறை ஆற்றினார். இதில் திருச்சியில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், 25 பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் திருச்சி தேசிய கல்லூரி விலங்கியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி பேராசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான டி. காயத்ரி நன்றி கூறினார்.
- கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார்.
- கருத்தரங்கில் 32 ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை சார்பில் ' இன்றைய நடைமுறை வாழ்வில் இயற் கணிதம் மற்றும் பகுப்பாய்வு கணிதம்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, அன்றாட வாழ்வில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் ஜோசப் கென்னடி கலந்து கொண்டு, எண் அமைப்பு மற்றும் புலங்கள் என்ற தலைப்பில் பேசினார். இதில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பரணிதர் கலந்து கொண்டு, குவிந்த தொடர்கள் குறித்தும், கணிதத்துறை பகுப்பாய்வு செய்து கற்பது குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 32 ஆய்வு மாணவர்கள், தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இந்த கட்டுரைகள் ஐ.எஸ். பி.என். எண் கொண்ட புத்தகமாக வெளியிடப்பட்டது. கருத்த ரங்கின் பொறுப்பாளராக கணிதத் துறை பேராசிரியை செண்பகா தேவி செயல் பட்டார். இதில் 19 கல்லூரி களை சேர்ந்த பேராசிரி யர்கள், ஆய்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை கணிதத்துறை தலைவர் வழிகாட்டுதல்படி, துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கணிதவியல் துறை கருத்தரங்கு நடந்தது.
- இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ''காளீஸ் கணித மன்றம்'' சார்பில் ''தரவு பகுப்பாய்வின் தற்போதைய போக்கு'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் சிவகாசி மெப்கோ ஷ்லெங்க் பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் வீணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கணிதவியல் துறைத் தலைவர் லலிதாம்பிகை வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்வு என்பது மூலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து நமக்குத் தேவையான முடிவுகள் மேற்கொள்ளப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும். தரவு பகுப்பாய் விற்குப் பயன்படக்கூடிய கருவிகள் மற்றும் நுட்பங்கள் பற்றி விளக்கினார். தரவு பகுப்பாய்விற்கு உறுதுணையாக இருக்கும் மென்பொருள்களின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றின் நன்மைகள் மற்றும் வரம்புகள் பற்றி எடுத்துரைத்தார். தரவு பகுப்பாய்விற்கு நிகழ் நிலையில் கிடைக்கப்பெறும் மென்பொருள்கள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார். "Tableau" என்ற மென்பொருளின் Excel பதிப்பு பற்றி விரிவான செய்முறை விளக்கம் அளித்தார்.
இந்த கருத்தரங்கில் 114 கணிதத்துறை மாணவர்கள் மற்றும் 9 உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.