என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் திருட்டு"

    • காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார்.
    • திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    தன் மீது கோபமாக இருக்கும் மனைவியை சமாதனப்படுத்த கணவன், தனது முதலாளியின் விலையுயர்ந்த காரை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிக்கும் ராகேஷ் அகர்வால், ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கிறார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரின் வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார். உரிமையாளரும் ஓட்டுநரை நம்பி சாவியைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் அவரை காணவில்லை. போன் செய்தும் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ஓனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸ், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக ஓட்டுநர் கூறியது போலீசை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    • கன்சல்டிங் நிறுவனத்தில் நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை.
    • இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த பெருந்துறை ஆர்.எஸ். வெள்ளமுத்து கவுண்டன்வலசை சேர்ந்த வர் கோபுராஜ் (வயது 30).

    இவர் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள பெருந்துறை ரோட்டில் தனது நண்பர் குமரவேல் என்பவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்கும் கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கோபு ராஜ் வழக்கம்போல் தனது கன்சல்டிங் நிறு வனத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்த 7 கார்களை கம்பி வேலி அமைக்கப்பட்ட பகுதிக்குள் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து அவர் காலை நிறுவனத்துக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்ட கார்களில் ஒரு காரை காணவில்லை. இது குறித்து அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

    காரை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோபுராஜ் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.
    • கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    பல்லடம் :

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகன் ரேமன்ஸ் ராய் (வயது 45). இவர் கடந்த மாதம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் இவரது மாமனார் வீட்டிற்கு காரில் வந்துள்ளார். இரவு அங்கு தங்கி விட்டு மறுநாள் காலை பார்த்த போது கார் காணவில்லை.கார் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று பல்லடம்- தாராபுரம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி விசாரணை செய்தபோது அதில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் கடந்த மாதம் லட்சுமி மில் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர்கள் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல்(வயது 23), ஏகாம்பரம் மகன் பாரத் (22) என்பதும் இருவரும் சேர்ந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கார்,2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.
    • முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்போரூர்:

    சித்தாலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் வந்து கொண்டு இருந்தார்.

    கேளம்பாக்கம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண்ணை இடித்து விட்டதாக கூறி ராஜ லிங்கத்தை தாக்கி காரின் சாவியை பறித்தனர். மேலும் கார் சாவியை போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் செய்வது அறியாமல் திகைத்த ராஜலிங்கம் அங்கிருந்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் வந்த தம்பதியினர் காரை திருடி தப்பி சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜலிங்கம் இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதில் கார் திருட்டில் ஈடுபட்டது பிரபல ரவுடியான புழல் சண்முகாபுரத்தை சேர்ந்த முரளி மற்றும் அவரது 2-வது மனைவி சங்கீதா என்பது தெரிந்தது.

    முட்டுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த முரளியை போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்றபோது வலது கைமுறிந்தது. சங்கீதாவையும் போலீசார் கைது செய்தனர். திருடிய காரை அவர்கள் குறைந்த விலைக்கு விற்று இருப்பதும் தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.
    • அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி, சூளையைச் சேர்ந்தவர் சிவலிங்கம்(60). வாடகை கார் வைத்துள்ளார். இவர் கடந்த 26ம் தேதி, பெருமாநல்லுார் அருகேயுள்ள ஒரு மதுக்கடை பாரில் மது அருந்தச் சென்றார்.

    அங்கு அவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் பேசி நெருக்கமானது. பின்னர் ஊட்டி சுற்றுலா செல்லலாம் என வாடகை பேசி காரில் புறப்பட்டனர்.இந்நிலையில், வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி டிபன் வாங்க சிவலிங்கம் இறங்கிச் சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரை எடுத்துக் கொண்டு தப்பியது. அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது காருடன் நான்கு பேர் கொம்பன் சுற்றி தெரிவது போலீசருக்கு தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெருமாநல்லூர் அருகே நடந்த சோதனையின் போது கார்த்திக்கு எது காரில் இருந்த நான்கு பேரையும் போலீசார் சுத்தியடைத்து கைது செய்தனர் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் பெருமாநல்லுாரைச் சேர்ந்த நந்தகுமார்,(20)ஜெயராம் (22), குன்னத்துாரைச் சேர்ந்த சபரீஸ்(28), மற்றும் ஒரு 17 வயது சிறுவன் எனத் தெரிந்தது. போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் உள்புற கதவுகள், பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மர்ம நபர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதிப்பதும், பின்னர் கார் கண்ணாடியை உடைத்து காரை எடுத்து செல்வதுமான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி டி.என்.ஹெச்.பி. காலனியை சேர்ந்தவர் ஜெய்சிங் (வயது 73). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பிளம்பிங் பிட்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி நெல்லையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஜெய்சிங் தனது மனைவியுடன் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலையில் ஜெய்சிங்கின் வீட்டின் முன்பக்க கேட் திறந்து கிடந்ததால் அருகில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஜெய்சிங் இல்லை. இருப்பினும் முன்பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மாயமாகி இருந்தது. வீட்டின் உள்புற கதவுகள், பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஜெய்சிங்கிற்கு தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்றதும், பீரோவில் பணம் மற்றும் மதிப்பான பொருட்கள் ஏதும் இல்லாததால் காரை திருடி சென்றுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தென்காசி போலீசார் காரை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே மர்ம நபர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதிப்பதும், பின்னர் கார் கண்ணாடியை உடைத்து காரை எடுத்து செல்வதுமான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    • அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடியும் கிடைக்கவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அப்பர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 40). இவர் தனது வீட்டு முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த அருண்குமார் காரை தேடினார். இருந்த போதும் கார் கிடைக்கவில்லை.

    காரை மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் சுமை தாங்கி தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் கடந்த 24 ந் தேதி வைத்தியநாதபுரம் முத்தா ரம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் செந்தில் குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமார் நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வந்த னர். இந்த நிலையில் செந்தில்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் நேற்று மதியம் கோட்டார் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டி ருந்தது. இதை பார்த்த செந்தில் குமாரின் உறவி னர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தபோது காரில் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து காரை யாரும் எடுத்துச் செல்ல முடியாமல் முன் மற்றும் பின் சக்கரத்தில் பூட்டு போட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பூட்டு களை உடைத்து மர்மநபர் கள் காரை எடுத்துச் சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப் பட்டிருந்த காரை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலி பர்கள் காரின் பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னை பதிவு எண்ணை கொண்டது ஆகும். இதையடுத்து கார் பதிவின் மூலமாக உரிமை யாளரின் முகவரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் முக வரி கிடைக்க வில்லை .

    இதனால் அதன் உரி மையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கி டையில் காரில் போடப் பட்டிருந்த பூட்டை உடைத்து காரை திருடிச் சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கினார்.
    • அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் வசிக்கும் ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்நிலையில், நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர் காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

    இதுகுறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது.

    • நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி தனது காரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்த புரியில் இருக்கும் பழுது பார்க்கும் மையத்தில் சோதனைக்காக கொடுத்திருந்தார்.

    அந்த காரை அவரது டிரைவர் ஜோகிந்தர் திரும்ப பெற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த கார் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த கார் குருகிராம் நகரை நோக்கி சென்றதாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

    அந்த காரை மீட்டு தருமாறு நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    • கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
    • வாட்ச்மேன் எழுந்து பார்த்தபோது கடையின் ஷோரூம் கண்ணாடி உடைந்து கிடந்ததையும், கார் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மாருதி கார் விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் காரைக்குடியைச் சேர்ந்தவர் ஆவார்.

    இந்த ஷோரூமில் ஆயக்குடியைச் சேர்ந்த அல்லிமுத்து (75) என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்த அவர் 12 மணியளவில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கவே அருகில் உள்ள ஒரு ஷெட்டில் தூங்கச் சென்று விட்டார்.

    அப்போது ஷோரூமில் முன் பக்க கண்ணாடியை உடைத்து ஒரு கும்பல் உள்ளே புகுந்தனர். மேலும் கடையினுள் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் உடைத்தனர். அங்கு வாடிக்கையாளர்களின் டெமோவுக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்விப்ட் காரை அவர்கள் திருடிச் சென்றனர்.

    செல்லும் போது சி.சி.டி.வி. கேமராவின் ஹார்டிஸ்க்கையும் எடுத்துச் சென்றனர். இன்று அதிகாலை வாட்ச்மேன் எழுந்து பார்த்தபோது கடையின் ஷோரூம் கண்ணாடி உடைந்து கிடந்ததையும், கார் திருடப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து ஆயக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை தொடங்கினர். இது குறித்து காரைக்குடியில் உள்ள உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியிலேயே மர்ம கும்பல் புகுந்து காரை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது.
    • ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அனுசியா என்பவரது வீட்டில் திருடு போனது. இதேபோல் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம குமார் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துதீவிர விசாரணை நடத்தினர்.

    கார் திருட்டு தொடர்பாக பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த சோழவரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இன்பராஜ், கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பார்வதி ராஜா என்கிற பாரதி (36) சென்னை சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் இன்பராஜ் மீது விருதுநகர், பனங்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இன்பராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தெருவோரங்களில் நிறுத்தப்படும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடி வந்து உள்ளனர். அவர்கள் 50க்கும் மேற்பட்ட கார்களை நோட்டமிட்டு திருடி இருப்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×