search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கம்"

    • சரசுவதி நாராயணன் கல்லூரியில் பாதுகாப்பான பஸ் பயண கருத்தரங்கம் நடந்தது.
    • மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பேசினார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இணைந்து மாணவர்கள் "பாதுகாப்பான பேருந்து பயணம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. மதுரை அரசு போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். துணை மேலாளர் அறிவானந்தம், போலீஸ் உதவி கமிஷனர் செல்வின் ஆகியோர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில் இளைஞர்கள், மாணவர்கள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை வாங்கி அதன் தொழில்நுட்பம்பற்றி தெரியாமல் இருப்பதாலும், சாலை போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது.

    பஸ்சில் இடம் இருந்தாலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். அது ஆபத்தான பயணமாகும். கடந்த அக்டோபர் மாதம் முடிய இவ்வாண்டில் 600-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் இருளப்பன், ராமகிருஷ்ணன், விஜயகுமார் நன்றி கூறினர்.

    • ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருத்தரங்கில் பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் எம்.பி.ஏ. மாணவ-மாணவிகளுக்கான சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை சுமதி தலைமை தாங்கினார். முதல்வர் வெங்கடேசுவரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் (சைபர் கிரைம்) கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஏமாறுவதில் படித்தவர்களே அதிகமாக உள்ளனர். இதற்காகவே காவல்துறையில் சைபர் கிரைம் என்ற என்ற ஒரு துறையே உள்ளது. முன்பின் தெரியாதவர்களின் அழைப்பு மற்றும் சம்பந்தம் இல்லாத லிங், பரிசு விழுந்துள்ளது, கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுகிறது. இதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் உடனே சைபர் கிரைம் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையங்களின் மெயில் ஐ.டி. தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நிவாரணம் பெற முடியும்.

    "காவல் உதவி" என்ற ஆப்சை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அதில் 60 விதமான உதவிகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் தங்களது புகைப்படங்களை வலைதளத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இதில 200- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான வழிகாட்டி என்ற பெயரில் கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடை பெற்றது.
    • ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ் தலைவர் ரோடரக்டர் ஹரிபிரசாத், வரவேற்று பேசினார்.

    கருப்பூர்:

    பெரியார் பல்கலைக்கழக நூலக துறையும்,  ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ், சேலம் ரோட்டரி சங்கம், திருவள்ளுவர் நூலக வாசகர் வட்டம், ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான வழிகாட்டி என்ற பெயரில் கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடை பெற்றது.ரோடரக்ட் சங்கம் ஜெம்ஸ் தலைவர் ரோடரக்டர் ஹரிபிரசாத், வரவேற்று பேசினார்.

    இதில் பெரியார் பல்கலைக்கழக நூலகர் ஜெயப்பிரகாஷ் பங்கேற்று, இளம் மாணவர்கள் மத்தி யில் பரவிக்கிடக்கும் இணையதள மோகத்தில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும், சமுதாயத்திற்கு இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும்,இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மாணவர்கள் பங்கு கொண்டு இந்த சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை சுயநலம் இல்லாமல் பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என கூறினார்.

    ரோட்டரக்ட் மாவட்ட தலைவர் ரோட்டேரியன் ஹரிதாஸ், வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் மாணவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

    • உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.
    • உலக மரபு வார விழா நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது. கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தடயங்கள் பற்றியும், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரியின் முதலாமாண்டு மாணவி சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கினர். உதவிப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • அறிவியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது
    • திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்

    திருச்சி

    திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் கல்வி புலமும் அனைத்து அறிவியல் துறைகளும் இணைந்து நிலையான மற்றும் நம்பகத் தன்மை வாய்ந்த எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு என்ற கருப்பொருளில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் பால் தயாபரன் தலைமை வகித்தார்.

    ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ஐக்கிய குடியரசை சேர்ந்த லிவர் ஃபூல் ஹோப் பல்கலைக்கழக சார்பு துணை வேந்தர் முனைவர் அதுல்யா நகர் மற்றும் ஐக்கிய குடியரசின் ரீடிங் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் மரபணுவியல் பேராசிரியர் முனைவர் விமல் கரணி ஆகியோர் அங்கம் வகித்தனர்.

    தொடக்க நாள் நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் சிறப்புரையாற்றினார். இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பவியல் துறை இயக்குனர் முனைவர் நகுல் பரசார் மற்றும் கனடா நாட்டின் திருத்துவ மேற்கத்திய பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் பிலிப் லையர்டு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இக்கருத்தரங்கில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையின் மூத்த அறிவியல் அறிஞர் முனைவர் வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார் . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர்கள் அழகப்பா மோசஸ், சத்தியசீலன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் வயலட் தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி கல்லூரியில் இளையோர் இன்னும் ஏற்றமுற சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி
    • 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர்

    திருச்சி:

    திருச்சி புனித வளனார் கல்லூரியில் புனித லூர்தன்னை ஆலய வளாகத்தில் உள்ள தெரேசா மக்கள் மன்றத்தில் இஞ்ஞாசியார் வழியில் உயர்வையே நோக்கிய உன்னதம் என்ற மைய நோக்கோடு இளையோர் இன்னும் ஏற்றமுற... என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்பா இயக்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 90-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்துகொண்டனர். புனித லூர்தன்னை ஆலய பங்குத்தந்தை மரிவளன், இஞ்ஞாசியாரின் தாராள மனம் வேண்டி என்ற ஜெபத்துடன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.

    இக்பா அமைப்பின் செயலாளர் முனைவர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ வரவேற்றார். புனித வளனார் அறிவியல், கலைமனைகளின் அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ ஆசியுரையில் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து பங்குகளில் இருந்து 91 இளையோர் பங்குபெறுவது இக்பாவின் வெற்றி வரலாற்றின் முதல் படி என்று குறிப்பிட்டு வாழ்த்தினார்.

    முதல் அமர்வு கருத்துரை யாளராக மாநில ஆலோசகர் மரிய அன்னராஜ் ஐக்கப் இளையோருக்கான இனிகோ என்ற தலைப்பில் ஆளுமைப் பண்புகளை மேலும் மேலும் வளர்த்து உயர்வடைய உன்னத வழிமுறைகளை விளக்கினார்.

    இரண்டாவது அமர்வில் மதுரை லொ யோலா தொலைக்காட்சி இயக்குநர் சேவியர் அந்தோனி எழுவீர், எழுவீர் இளையோரே என்ற தலைப்பில் மதர் தெரேசா வின் தாராளமனதுடன் ஆற்றிய அரும்பணி பற்றியும், தன்னுடைய நிறை, குறைகளை இறைவனிடம் ஒப்படைத்து, அல்லவை நீக்கி நல்லவை பெருக்கும் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகளை கண்ணதாசன் அற வுரைகளைப் பற்றியும், மனித வாழ்வு கெடும் பல்வேறு நிலைகள் பற்றிய பழமொழிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

    இளைய கடவுள் எங்கள் இயேசு என்ற மறையுரை யுடன் திருப்பலியை திருச்சி குருகுல முதல்வர் எல்.அந்துவான் நிறைவேற்றினார். இளையோரே முக்காலத்தையும் இணைக்கும் தலைவர்கள் என்று வாழ்த்தினார்.

    மூன்றாம் அமர்வில் திருச்சி கார்மல் சமூக சேவை மைய இயக்குநர் சுரேஷ் வாருங்கள், இளையோரே, வரலாறு படைக்க என்ற தலைப்பில் இன்றைய மாய உலகில், இளையோர் பெற வேண்டிய தலைமைப் பண்புகளை இடுக்கண் என்ற குறும்படம் மூலம் விளக்கினார்.

    இறுதி அமர்வில் திருச்சிலுவை கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான்சி ராணி இளை யோரோடு எனது அனுபவம் என்ற தலைப்பில் இயேசுவோடு பவுல் வாழ்ந்ததைக் குறி ப்பிட்டு நாமும் அப்படியே இயேசுவின் வல்லமையில் என்றும் நிறைவாழ்வு வாழவேண்டும் என்று எழுச்சியுரை ஆற்றினார்.

    இக்பா தலைவர் முனைவர் கே.எஸ்.அருள் சாமி நன்றி தெரிவித்து பேசுகையில், வருங்காலத்தில் இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, ஆளுமைத்திறன், இனிகோ வழியில் ஆன்மீகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று சிறந்த இறைமக்களாக விளங்க இக்பா மாதந்தோறும் பயிற்சிகளை சிறந்த வல்லுநர் குழு மூலம் நடத்தும் என்று உறுதி அளித்தார்.

    இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழும், சேவியர் அந்தோனி எழுதிய இளையோருக்கான இனிகோ என்ற ரூ.500 மதிப்புள்ள அரிய நூல் முனைவர் ச.சாமிமுத்து குடும்பத்தினரின் நிதிய ஏற்பாட்டால் இலவசமாக வழங்கப்பட்டது.

    • ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு,கல்லுரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,கல்லுரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

    இதில், ஜெஸ்பர் ஆப்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் புஷ்ப ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வளர்ச்சி, பயிற்சியின் பயன்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும் விழாவில், துறை தலைவர்கள் புவியரசு, சுபா, திவாகர், தினேஷ் பாபு, நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில்,மின்னியல் துறை தலைவர் பாலாஜி பிரகாஷ் நன்றி கூறினார்.

    • டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் நடைபெற்றது.
    • நீலகிரி மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளும், கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதியுதவியுடன் ஜே.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் இணைந்து ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் "மாற்றுத் திறனாளி பெண்களின் உரிமைகள்" குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜே.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியின் முதல்வர் தனபால், வேலூர் தொழில்நுட்ப நிறுவன பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையத்தின் இயக்குனரும் பேராசிரியருமான சந்திரசேகரன், நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் மலர்விழி, மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கோமதி சுவாமிநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இணை பேராசிரியை டாக்டர் கவுரம்மா அனைவரையும் வரவேற்றார். துறையின் தலைவர் காளிராஜன் மாற்றுத்திறனாளி பெண்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் கமலா வேணி, முன்னாள் பெண்கள் பாதுகாப்பு அலுவலரும், வக்கீலுமான மரகதவல்லி, ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியை மற்றும் தலைவர் டாக்டர் கனகாம்பாள், முன்னாள் சிறப்பு அரசு வக்கீல் மாலினி பிரபாகரன், மருந்துபகுப்பாய்வு துறை இணைபேராசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளும், 45 பிற பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கல்லூரியின் மருந்தியல் வேதியியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் ஜூபி முடிவில் நன்றி கூறினார்.

    • சிங்கப்பூர், மலேசிய பிரதிநிதிகள் பங்கேற்பு
    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் உலக தொழில் வர்த்தக கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ராபர்ட் வின்சென்ட் எட்வர்ட் தலைமை தாங்கினார். செய லாளர் பைஜூ நிஷித் பால், கருத்தரங்க ஒருங் கிணைப்பு செயலாளர் ஜெயசேகர், ராஜாக்க மங்கலம் கடல் வாழ் உயிரின ஆய்வு மைய ஒருங்கிணைப்பு நிர்வாகி பிரின்ஸ் கிளாட்சன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் மலே சியா மற்றும் சிங்கப் பூரை சேர்ந்த தொழில் முனைவோர், விஞ்ஞானி கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பல்வேறு கல்லூ ரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னாள் மீன்துறை இயக்குனர் பால்பாண்டியன், கடல் வாழ் உயிரின ஆய்வு மைய முன்னாள் துறை தலைவர் பேராசிரியர் லாசரஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலேசியா மற்றும் சிங் கப்பூரில் இருந்து வருகை தந்த நிபுணர்கள் அசீசா ஜலாலுதீன், அய்யப்பதாஸ், டடின் மல்லிகா சுப்பிரம ணியம், காண்டைஸ் செங், யோகேஸ்வரி, ஜூலியா லிம் உள்ளிட்டோர் கருத்த ரங்கில் கலந்து கொண்டு பேசினர்.

    கருத்தரங்கு குறித்து ராஜாக்கமங்கலத்தில் உள்ள கடல்வாழ் உயிரின ஆய்வு மைய துறை தலைவர் பிரகாஷ் வின் சென்ட் கூறியதாவது:-

    இந்திய அளவில் தொழில் வளர்ச்சி இலக்கை பிரதமர் 420 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார். அதேபோன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ கத்தில் 85 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் வளர்ச்சி குறியீட்டை நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டும் விதமாக இந்த கருத்தரங்கு நடத்தப் பட்டுள்ளது.

    இதன் மூலம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடு களுக்கு இணையாக தமிழகமும் தொழில் வளர்ச்சியில் முன்னுரிமை பெற மாணவ, மாணவி களுக்கு சுய தொழில் களை எவ்வாறு தொடங்குவது, அதில் தற்போதைய புதிய தொழில்நுட்பங்கள் என்ன என்பது போன்ற விவரங்களை தெரிவிப்ப தற்காக இந்த கருத்தரங்கு நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
    • இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உள் புகார்கள் குழு மாணவர்கள் ஆலோசனை குழு மற்றும் வேலைவாய்ப்பு குழு ஆகிய குழுக்கள் இணைந்து ''கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பிலான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தி னராக ரெக்சோனா நம்பிக்கை கல்வி பயிற்சியாளர் சுதா, கலந்து கொண்டார்.

    மாணவர் ஆலோசனை குழு உறுப்பினர் மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் மற்றும் உள் புகார்கள் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவிகளின் கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இன்றைய சூழ்நிலையில், மாணவிகள் எவ்வாறு தங்களது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை தொழிற்துறையில் நுழை வதற்கு திறன்களை மேற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.

    ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது இருதரப்பட்ட வாழ்க்கை சூழலை எதிர்கொள்வதற்கான யுக்திகளையும், நேர்த்திகளையும் பயிற்று வித்தார்.

    வேலைவாய்ப்பு குழு பொறுப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துரையாற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் குறித்தும், கோதைநாயகி குறித்தும், மகாலிங்கம் குறித்தும், சின்னப்பபாரதி குறித்தும் படைப்பாற்றல், எழுத்தாற்றல், பண்மு கத்திறன், கவித்திறன் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துரையாற்றப்பட்டது.

    முன்னதாக அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் திருக்குறள் நடனம் நிகழ்த்தப்பட்டது.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) பவானி, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் எழிலரசு, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன், அரசு ஆடவர் கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பழனிவேலு, அரசு ஆடவர் கலைக் கல்லூரி விரிவுரையாளர் பேகம்,

    கலைமகள் ஆசிரியர் சி.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழறிஞருமான கோவிந்தசாமி, தமிழ் வளர்ச்சித் துறையின் தமி ழ்ச்செம்மல் விருதாளர்கள் கருமலைத் தமிழாழன், ராசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவை போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது.
    • மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவை போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது.

    இந்த கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    முன்னதாக அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள் இசையுடன் திருக்குறள் நடனம் நிகழ்த்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பவானி, தமிழ் வளர்ச்சித்துறை முன்னர்ள இயக்குநர் எழிலரசு, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன், அரசு ஆடவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பழனிவேலு, அரசு ஆடவர் கல்லூரி விரிவுரையாளர் பேகம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்குமார், முன்னர்ள சட்டமன்ற உறுபப்பினர் கோவிந்தசாமி, தமிழ் வளாச்சித்துறையின் தமிழ்செல்மல் விருதாளர் கருமைத் தமிழாழன், ராசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ×