என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tata Sons"
- டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
- டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். மும்பையில் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்பட்டது.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.
2012 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ரத்தன் டாடா உயிரிழந்ததை அடுத்து, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா இன்டர்நேஷனல் லிமிட்டெட்-இன் நிர்வாக இயக்குநராக இருந்தவர் நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
இந்நிலையில், நோயல் டாடாவால் ஒரேநேரத்தில் டாடா அறக்கட்டளை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்க முடியாது என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் டாடா அறக்கட்டளை அல்லது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மட்டும் தான் இருக்க முடியும்.
டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு வர நோயல் டாடா விரும்பினார். ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.
இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவராக டிசிஎஸ் சிஇஓவாக இருந்த என்.சந்திரசேகரனை ரத்தன் டாடா நியமித்தார்.
ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா அறக்கட்டளை 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோரபஜி டாடா அறக்கட்டளை ஆகியவை முக்கிய அறக்கட்டளைகள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் டி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது.
- பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை வழங்கி இருந்தார்.
- சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது.
அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகத்தை கட்டமைப்பதற்கான திட்டத்தை டாடா சன்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அம்மாநில சட்டசபை வழங்கியது. அயோத்தியில் கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
மேலும், இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், கோவில்களின் அருங்காட்சியக திட்டத்தை செயல்படுத்த டாடா சன்ஸ் குழுமத்திற்கு உத்திர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ. 650 கோடியில் உருவாகும் இந்த திட்டத்திற்காக உத்திர பிரதேச அரசின் சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது. 90 ஆண்டுகள் லீசுக்கு வழங்கப்படும் நிலத்திற்காக ரூ. 1 மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.
அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியக திட்டத்திற்காக டாடா சன்ஸ் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 650 கோடியை செலவு செய்ய இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் நாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற கோவில்களின் கட்டமைப்பு திறன் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும்.
அருங்காட்சியகம் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி திட்டம் ஒன்றும் டாடா சன்ஸ்-க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடி ஆகும். இதே போன்று லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் கபில்வஸ்து ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்தவும் சட்டபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
புதுடெல்லி:
ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
இந்நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சைரஸ் மிஸ்திரி பயணித்த சொகுசு கார், சாலையின் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்
- சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை:
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி, மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பியபோது, பால்கர் மாவட்டம் சாரோட்டியில் உள்ள சூர்யா ஆற்றுப்பாலத்தில் சென்றபோது இன்று பிற்பகல் 3 மணியளவில் விபத்து நடந்துள்ளது. அவர் பயணித்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி உள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த கார் டிரைவர் உள்ளிடட் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சைரஸ் மிஸ்திரி, 2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது(தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் உள்ளார்).
பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப் போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு அவர் தடை வாங்கக்கூடும் என்பதால் மிஸ்திரிக்கு எதிராக டாடா குழுமம் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தது.
இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் டாடா சன்ஸ் - மிஸ்திரி வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பதவி நீக்கத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. டாடா குழுமம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நம்பிக்கையை மிஸ்திரி இழந்ததால் அவர் நீக்கப்பட்டதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்