என் மலர்
நீங்கள் தேடியது "Teenager"
- குடும்ப தகராறில் வாலிபரை மைத்துனர் குத்தி கொன்றார்.
- திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவடடம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 32), கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்க ளுக்கு 2 குழந்தை கள் உள்ளனர். அன்னலட்சுமி யின் தாயார் சுந்தரி (42), தம்பி பொன்ராஜ் (20) ஆகியோரும் அதே தெருவில் வசித்து வருகின்றனர்.
காமராஜூக்கும், அன்ன லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அப்போது பொன்ராஜ் அவர்களது வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பார். இது காமராஜிக்கு பிடிக்கவில்லை. அதனால் தன் குழந்தைகளுடன் பொன்ராஜ் விளை யாடும்போது கோபமாக பேசி சண்டை போடுவார்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தைகளுடன் பொன்ராஜ் விளையாடி கொண்டிருந்தபோது காமராஜ் வழக்கம்போல் சண்டையிட்டுள்ளார்.
அப்போதும் ஆத்திரத்தில் இருந்த காமராஜ் இரவு 9.30 மணி அளவில் பொன்ரா ஜின் வீட்டுக்கு சென்று தக ராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்தி ருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி உள்ளார். இதில் நிலைகுலைந்த பொன்ராஜை உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக பொன்ராஜின் தாயார் சுந்தரி கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை தேடி வருகின்றனர்.
- சேலம் மணியனூர், நாக லிங்கம் தெரு பகுதியில் நேற்று இவரது வீட்டின் அருகே உள்ள காபி பார் பக்கம் சில வாலிபர்கள் அமர்ந்து கொண்டு செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு, திடீரென ஆத்திரத்தில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர், நாக லிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிட்டிபாபு ( வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டின் அருகே உள்ள காபி பார் பக்கம் சில வாலிபர்கள் அமர்ந்து கொண்டு செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எழுந்த சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக சிட்டிபாபு, அவர்களிடம், அந்த பக்கம் சென்று விளையாடும் படி கூறினார். அதற்கு அந்த வாலிபர்கள், நாங்கள் இங்கு தான் விளையாடுவோம் என கூறியதாக தெரி கிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு, திடீரென ஆத்திரத்தில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த சிட்டிபாபு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அடிதடி பிரிவில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் , மணியனூர் காந்தி நகர் மதுரை வீரன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த, வெள்ளிப்பட்டறை தொழிலாளி தினேஷ் (22) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
- சாயல்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஓரிவயல் கிராமத்தைச் சேர்ந்த ஆத்மநாதன் மகன் வில்வபிரதாப் (22). இவர் நேற்று இரவு சாயல்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது பைக்கும், சாயல்குடியில் இருந்து மலட்டாறு நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாயழகு மகன் முனீஸ்வரன் (28)ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சாயல்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் இருவரையும் கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வில்வ பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- சாத்தூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
- இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெருமாள்பட்டியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலம் உள்ளது.
இங்கு சம்பவத்தன்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.
இதுகுறித்து ஊமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபரின் அருகில் ஒரு பை கிடந்தது. அதில் விபூதி, கோவில் ரசீதுகள் உள்ளிட்டவை இருந்தன. மேலும் சில அடி தூரத்தில் டி.என்.37, ஏ.க்யூ. 1333 என்ற எண் கொண்ட மொபட்டும் கேட்பாரற்றுக கிடந்தது.
மேற்கண்டவற்றை கைப்பற்றிய போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கொலையான வாலிபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் வாலிபர் பணத்தை திருடிச்சென்றார்.
- ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது.
மதுரை
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன் (வயது 43). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்தார். அவர் "தான் மதுரை மத்திய ஜெயிலில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும், எனக்கு செல்போன் கவர் வேண்டும்" என்று தோரணையாக கேட்டார்.
உடனே பாவா பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி அந்த வாலிபர் மேஜையில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பாவா பக்ருதீன் அந்த வாலிபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அவர் மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த வாலிபர் ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
- இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- சேலையால் தூக்கில் தொங்கியபடி வேலன் இருந்து உள்ளார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்தவர் வேலன் (40). இவரது மனைவி தாமரை. இவர்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரவு தூங்க செல்லும் போது தனியாக ஒரு அறையில் கதவை தாழிட்டு விட்டு வேலன் தூங்க சென்றாக தெரிகிறது.
பின்னர் இன்று அதிகாலை வழக்கம் போல் வேலன் வீட்டில் இருந்தவர்கள் அவர் இருந்த அறை கதவை தட்டி உள்ளனர். அறையில் சத்தம் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சேலையால் தூக்கில் தொங்கியபடி வேலன் இருந்து உள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் வேலன் மீது பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் சில திருட்டு வழக்குகள் இருந்ததாகவும், ஒருமாதம் முன்பு வேலன் கைதாகி சிறைக்கு சென்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- மாதப்பூா் பெட்ரோல் நிலையம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் முழு நிா்வாண கோலத்தில் இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா்.
- . சம்பவ இடத்துக்கு அவா்கள் சென்று பாா்த்தபோது அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா்.
பல்லடம் :
பல்லடத்தை அடுத்த மாதப்பூா் பெட்ரோல் நிலையம் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் முழு நிா்வாண கோலத்தில் இளைஞா் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கருதினா். மேலும் இது குறித்து அந்த ஊரில் உள்ள இளைஞா்களிடம் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு அவா்கள் சென்று பாா்த்தபோது அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி சென்று விட்டாா்.
இந்த நிலையில் அதே இடத்தில் நேற்றும் அந்த இளைஞா் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அந்த வழியே செல்லும் பெண்களுக்கு ஆபாச சைகைகளை காட்டியுள்ளாா். இதை கண்காணித்த அந்த ஊரைச் சோ்ந்த வாலிபர்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து கொடுத்தனர். பல்லடம் போலீசில் அந்த நபரை ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அவா் சேலத்தை சோ்ந்த இளங்கோ என்பவரது மகன் மணிவேல் (28) என்பதும், தற்போது பொங்கலூா் சக்தி நகா் பகுதியில் கோழிப்பண்ணையில் வாகன ஓட்டுநராக வேலை பாா்த்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
- கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனே அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த அபிஷேக் (வயது 20 ) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
சாத்தூரை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்தி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அடிக்கடி வாந்தி எடுத்ததால் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.
இதேபோல் வ.புதுபட்டியை சேர்ந்தவர் 16 வயது பிளஸ்-2 மாணவி. இவரை அரசு மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அறிவரசன் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வீரமணி மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
- மன வேதனை அடைந்த வீரமணி விஷம் குடித்தார்.
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சி ஆண்டிபந்தல் தோப்பு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் வீரமணி (வயது 35) கூலித்தொழிலாளி.
இவருடைய மனைவி தையல்நாயகி (35). வீரமணி மதுகுடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனவைி கோபித்து கொண்டு புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீரமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய வாலிபர் விபத்தில் பலியானார்.
- பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் கீழபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன். இவரது மகன் முகமது முஷபர் கனி(23). நேற்று இவர் நண்பர்களுடன் திருமங்கலத்தை அடுத்துள்ள மறவன்குளத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்றார்.
கொண்டாடத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 2.30 மணியளவில் அவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையம் அருகே மின்வாரிய பஸ்நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் வந்த போது நிலைதடுமாறியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் முகமது முஷபர் கனி சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த அலெக்ஸ்பாண்டியன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலெக்ஸ் பாண்டியை மீட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முகமது முஷபர் கனியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர்.
- பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர்.
கடலூர்:
விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்திற்கு தடம் எண்.12-ல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பேர்பெரியான்குப்பம் அனந்தீஸ்வரன் கோவில் அருகே பஸ்சினை நிறுத்திவிட்டு காலையில் விருத்தாசலத்திற்கு இந்த பஸ் இயக்கப்படும்.
அதுபோல கடந்த 31-ந் தேதி இரவு இந்த பஸ்சினை நிறுத்திவிட்டு டிரைவர் முருகன் (வயது 46), கண்டக்டர் எம்பெருமான் 2 பேரும் ஓய்வு எடுத்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பினை கொண்டாடும் விதமாக குடித்து விட்டு முழு போதையில் 3 வாலிபர்கள் நள்ளிரவு 3 மணிக்கு பஸ்சின் அருகில் வந்தனர். பக்கவாட்டில் நின்ற 3 பேரும் பஸ்சினை தட்டினர். பஸ்சினுள் இருந்து இறங்கி வந்த டிரைவர் முருகன், எதற்காக பஸ்சினை தட்டுகிறீர்கள் என்று போதை வாலிபர்களிடம் கேட்டுள்ளார்.ஆத்திரமடைந்த போதை வாலிபர்கள் 3 பேரும் டிரைவர் முருகனை தாக்கிவிட்டு, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிவிடுகின்றனர்.இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முருகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மானடிக்குப்பம் ராஜதுரை (வயது 24), முத்தாண்டிக்குப்பம் பிரவின் குமார் (23), வீரசிங்ககுப்பம் செல்வமணி (23) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க பண்ருட்டிக் கு அழைத்து வந்தனர். அப்போது பிரவின்குமார் என்ற வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து பண்ருட்டி உதவி போலீஸ் சுப்பிரண்டு சபியுல்லா, முத்தாண்டி க்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி ஒடிய வாலிபரை தேடி வருகின்றனர்.