என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The teenager was arrested"
- ரூ.20 லட்சம் மதிப்புள்ளது
- போலீசார் ஜெயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த முசிறி சாலையில் தனியார் கல்குவாரி உள்ளது.
இந்த தனியார் கம்பெனியில் பாறை உடைப்பதற்காக வைத்திருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள ராக் பிரேக்கர் எனப்படும் எந்திரம் திருட்டு போய்விட்டதாக வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து திருட்டு போன பாறை உடைக்கும் எந்திரத்தை தேடி வந்தனர்.
இதில் திருப்பத்தூரை சேர்ந்த சரத்குமார் (வயது 31) என்பவர் பாறை உடைக்கும் எந்திரத்தை மினிவேனில் ஏற்றி திருடி சென்றது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் சரத்குமாரிடம் இருந்து எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்
- துரத்திச் சென்று மடக்கி பிடித்தார்
ஆம்பூர்:
ஈரோடு மாவட்டம் ஆதியூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 31). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னைக்கு லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை தேசிய நெடுஞ்சாலையில் காலை கடனை கழிப்பதற்காக லாரியை நிறுத்தினார்.
செல்போன் மற்றும் மணிபர்சை லாரியில் வைத்துவிட்டு அருகே உள்ள இடத்திற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார். இதனை நோட்டமிட்ட மாங்காய் தோப்பை சேர்ந்த ஆரிப்கான் (32) என்பவர் லாரியில் இருந்த செல்போன் மற்றும் மணி பர்சை திருடினார்.
இதனைக் கண்ட கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து அவரை துரத்திச் சென்று பிடித்தார். மேலும் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆரிப்கானை ஒப்படைத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரிப் கானை கைது செய்து நேற்று இரவு வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- 12 கிலோ போதைபொருள் பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார், திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவர் கையில் பையுடன் சுற்றி திரிந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், அவர் ஆந்திர மாநிலம் கடதுல்லா கிராமத்தை சேர்ந்த கிரி சாணி மகேஸ்வராவ் (வயது 28) என்பதும், இவர் பையில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை சேலம் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
- சொத்து தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த அரசு ஆணை பாளை யத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 33).தொழிலாளி. இவரது தாய்மாமன் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (48).
இந்த நிலையில் நேற்று ராஜேந்திரனிடம் சரத்குமார் சென்று சொத்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
ஆத்திரம் அடைந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை வெட்டியுள்ளார். இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீரெங்கம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது
- கோவிலில் திருட முயன்ற வாலிபர் கைது ெசய்யப்பட்டனர்
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் புது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). இவர் அங்காளம்மன் கோவிலில் பூசாரி ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்வத்திடம் வாலிபர் ஒருவர் வந்து வாய் புண் நோய் இருப்பதாக கூறி, விபூதி தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பிய கோவில் பூசாரி, விபூதியை கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.
அப்போது அந்த வாலிபர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் குடத்தை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த பூசாரி அதிர்ச்சி அடைந்து சத்தம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இளைஞரை பிடித்து வைத்துக்கொண்டு துறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை செய்ததில் அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (21) என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரி செல்வம் என்பவர் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரப் பகுதியில் பட்டப்பகலில் கோயிலில் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பட்ட பகலில் கதவை உடைத்து துணிகரம்
- ரோந்து பணியில் சிக்கினார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீசார் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் மகள் நந்தினி (வயது 31). இவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் கபோர்டை உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, குற்றப்பிரிவு போலீசார் விஜயரங்கன், சவுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் நேற்று அண்ணான்டப்பட்டி கூட்டு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
வாலிபரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அவர் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் அருகே உள்ள வ.உ.சி.தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30) என்பதும், இவர் போலீஸ் குடியிருப்பில் புகுந்து நந்தினி வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் இவர் மீது சேலம், திருப்பூர், தருமபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
- சாலையில் தகராறு ஏற்பட்டுள்ளது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூரை அடுத்த வெங்கடா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வர்ரமேஷ் (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார்.
அதேப்ப குதியை சேர்ந்த அன்பரசன் (35) என்பவருக்கும், ரமேசுக்கும் இடையே ஆம்பூர் பைபாஸ் சாலையில் தகராறு ஏற்பட்டுள் ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அன்பரசன் அருகே இருந்த கல்லை எடுத்து ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரமேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பர சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லை எடுத்து தாக்கினார்
- சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வெங்கடாசமுத்திரம் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).கூலி தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று ஆம்பூர் பைபாஸ் சாலை வந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும் ரமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அன்பரசன் அருகே உள்ள கல்லை எடுத்து ரமேஷை தாக்கி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து ரமேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 50 கிராம் கஞ்சா பறிமுதல்
- ரோந்து பணியில் சிக்கனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் போலீசார் கம்பி கொள்ளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். சந்தேகம் படும்படி சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நாயக்கனேரி ஊராட்சி மலை பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜித் (வயது 23) என்பதும் இவர் பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- மகளிர் போலீசில் புகார்
- வேலூர் சிறையில் அடைத்தனர்
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.
காட்பாடி அடுத்த சேவூர் சத்தியபுரத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 19) சிறுமி தனியாக இருப்பதை அறிந்தார்.
சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது தனியாக இருந்த சிறுமியை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். சிறுமி கத்தி கூச்சலிட்டார்.
இதனால் பயந்து போன சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவகுமாரை கைது செய்தனர்.
பின்னர் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர்.
- அவமானம் தாங்காமல் திரவத்தை குடித்த மாணவி
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன், கொசண்ணாமலை தெருவை சேர்ந்தவர் சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு (வயது 23).
இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மாணவியை வழிமறித்த சந்துரு காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த மாண விக்கும், சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்தி ரமடைந்து சந்துரு சக மாண வர்கள் முன்னிலையில் அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தி சரமாரியாக தாக்கி மிரட்டியதாக கூறப்ப டுகிறது.
பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி அழுது கொண்டே இருந்தார். சக மாணவ-மாணவிகள் முன் தன்னை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த அந்த மாணவி நேற்று கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப் பதிவு செய்து சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது
- ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
காட்பாடி அடுத்த பரதராமி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவரும் மாலியப்பட்டை சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெங்கடேசன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து உள்ளார். இதனால் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார். ஆனால் இளம்பெண்ணை வெங்கடேசன் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில் வெங்கடேசனுக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் இடையே திருமணம் நடந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய வெங்கடேசன் மீது காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்