search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ticket examiner"

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பஸ்களில் டிக்கட் பரிசோதகர்கள் பற்றாக்குறையாகினர்.
    • அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம், காரைக்குடி மண்டலத்தில் 11 கிளைகள் மூலமாக 220 டவுன் பஸ் களையும், 500-க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்களையும் இயக்குகிறது. இதில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட டிரை வர்கள், கண்டக்டர்கள் பணியாற்றுகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலை யில் அரசு பஸ்சில் பரிசோ தகர் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வரு கிறது. இதை சாதகமாக்கும் நேரம் கண்காணிப்பாளர் சிலர் தனியார் பஸ்களுக்கு தாரை வார்த்து கொடுப்ப தால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    அரசு பஸ்கள் நிர்ணயிக் கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படுகிறதா, பயணி களை ஏற்றி இறக்குகிறார் களா, பஸ்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று டிக்கட் பரிசோதகர்கள் ஆய்வு செய்வார்கள். தற் போது நிலவும் பற்றாகுறை யால் பஸ்களில் முறையான ஆய்வுகள் நடப்பதில்லை. சரக்குகள் மூலமாக கிடைக்க வேண்டிய முறையான வருவாயும் கிடைப்பதில்லை.

    இது குறித்து அரசு டிக்கெட் பரிசோதகர் ஒருவர் கூறியதாவது:-

    காரைக்குடி மண்டலத் தில் 72 டிக்கெட் பரிசோத கர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது 38 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் பஸ்களை கண்காணிக்க முடிவ தில்லை.

    காரைக்குடி மண்டலத்தில். இதில் மேலும் சிலர் ஓய்வு பெற உள்ளனர். இதனால் காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. போதிய பரிசோதகர்கள் இல்லாததால் பஸ்களில் ஓசிப்பயணம் அதிகரித் துள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர்கள் 20 பஸ்கள் வரை கண் காணிக்க வேண்டும் என்பதால் பெயரளவிலேயே பரிசோதனை நடைபெறுகின்றன என்று அவர் கூறினார்.

    ராமநாதபுரம் பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத் திற்கு புறப்படுவது கிடை யாது. நேரம் கண்காணிப் பாளர் ஆசியுடன் பஸ் இருக்கைகள் நிரம்பும் வரை காத்திருந்து புறப்படுகிறது. இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க காரைக்குடி மண்டலத்தில் டிக்கட் பரிசோதகர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பஸ்களில் போதிய கண்காணிப்பு இல்லாததால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என் பது மறுக்க முடியாத உண்மை.

    காரைக்குடி மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓடும் பஸ்சில் டிக்கெட் பரிசோதகரை கத்தியால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை சாமிபிள்ளை தோட்டம் அகத்தியர் தெருவை சேர்ந்தவர் தமிழ்வழி. தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர்.

    இவர் நேற்று காலாபட்டில் இருந்து புதுவை வரும் போது பஸ்சில் பயணம் செய்த தமிழ்வழியிடம் சிலர் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழ்வழியை வெட்டினார்கள். உடனே அவர் உயிர் பிழைக்க ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் தூரத்தி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தமிழ்வழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தமிழ்வழியை ஓடும் பஸ்சில் வெட்டியது முத்தியால்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ராஜ் என்ற புஷ்பராஜ் என்பதும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், கோட்டக்குப்பத்தை சேர்ந்த தென்னரசு என்பதும் தெரியவந்தது.

    இதில் ராஜ் என்ற புஷ்பராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு அடி-தடி, கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய பயணியை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    ரெயிலில் திருவனந்தபுரம், பாப்பனகோடு பகுதியை சேர்ந்த ராமசாமி(வயது36) என்பவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

    இந்த ரெயிலின் டிக்கெட் பரிசோதகராக லார்டுவின் ஆனந்த் என்பவர் இருந்தார். ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது லார்டுவின் ஆனந்த் முன்பதிவு பெட்டியில் உள்ள ஒவ்வொருவரிடமும் பயண டிக்கெட்டை பரிசோதித்து வந்தார். ராமசாமி டிக்கெட்டையும் பரி சோதித்து கொண்டிருந்தார்.

    அப்போது லார்டுவின் ஆனந்துக்கும், ராமசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ராமசாமி டிக்கெட் பரிசோதகரை தாக்கினார்.

    இதையடுத்து ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. டிக்கெட் பரிசோதகர் ஈரோடு ரெயில்வே போலீசில் இது குறித்து புகார் செய்தார்.

    அதன் பேரில் வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ராமசாமியை கைது செய்தனர்.

    ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகளுடன் கடந்த 4-ந் தேதி ஊட்டிக்கு சென்றனர். பின்னர், கோவை வந்த அவர்கள் அங்கிருந்து சென்னை வரும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில், சேலம்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.

    அப்போது, ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரான கோவையை அடுத்த போத்தனூர் காந்திநகரை சேர்ந்த அனீஷ்குமார் (வயது 25) என்பவர், அந்த தம்பதியின் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென எழுந்து சத்தம் போட்டதால் அவளது பெற்றோர் மற்றும் சக பயணிகள், அனீஷ்குமாரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனீஷ்குமாரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார். 
    ×