என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tractor seized"
- ஆய்வுபணி மேற்கொண்டு இருந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா தடுத்து நிறுத்தினார்.
- பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 டிராக்டர்களையும் பறிமுதல்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தில் இருந்து உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி சென்ற 4 டிராக்டர்களை ஆய்வுபணி மேற்கொண்டு இருந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா தடுத்து நிறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் குறும்பலாப்பேரியை சேர்ந்த அமல்ராஜ்(வயது 56), அம்பை மன்னார்கோவிலை சேர்ந்த பிரகாஷ்(23), வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த யோகேஷ்(20), மணிகண்டன்(21 )ஆகியோரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில்சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரை கண்டதும் அவ்வழியே வந்த டிராக்டரை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். டிராக்டரை சோதனை செய்தபோது அதில் ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணலுடன் டிராக்டரை பறி முதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
கடலாடி மலட்டாறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக புகார் வந்தது.
அதன்பேரில் கடலாடி துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன், கடலாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கடலாடி ஆப்பனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
கடலாடி-ஆப்பனூர் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது கண்ணன் பொதுவன் விலக்கு ரோடு அருகே என்.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சண்முகநாதன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் புரசங்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத டிராக்டர்களில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவது தெரியவந்தது. டிராக்டர்களை ஓட்டி வந்த டிரைவர்கள் அதனை நிறுத்தி விட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
இரு டிராக்டர்களும் கைப்பற்றபட்டு கடலாடி போலீஸ் நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #tamilnews
சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகளில் இருந்து அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சாணார்பட்டி பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா தலைமையில் ஏட்டுகள் செல்வராஜ், முருகானந்தம் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். டிராக்டரை சோதனையிட்டதில் கிணற்று மணல் கடத்தியது தெரிய வந்தது.
எனவே டிராக்டரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் ஜீவாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அப்போது அவ்வழியே வந்த மரக்கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை நடத்தினர். சோதனையில் எவ்வித அனுமதியின்றி தாளமடை ஓடையில் மரங்களை வெட்டி டிராக்டரில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுமார் 3 டன் எடையுள்ள மரக்கட்டைகளுடன் டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் பழனி தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சப்கலெக்டர் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குரிக்கை கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையொட்டி திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் அங்கு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அரிகோவிந்தன் (வயது 25) என்பரை கைது செய்தனர். அடுத்து மொகலார் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே ஊரைச் சேர்ந்த ராஜமாணிக்கம், அன்பழகன், மணிகண்டன் மற்றும் மேமாளூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகிய 4 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாடியந்தல் கிராமத்தில் மணல் கடத்தியதாக ஒரு டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் ஆற்று மணல் மற்றும் கனிம வளங்கள் அதிக அளவில் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. போலீசார் மற்றும் கனிமவளத்துறையினர் கடத்தல் கும்பலை பிடித்து அபராதம் விதித்தபோதும் மணல், கனிமங்கள் கொள்ளை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கருப்பையாபுரம் பஞ்சந்தாங்கி ஓடை அருகே அரசுக்கு சொந்தமான குவாரி உள்ளது. தற்போது ஏலம் யாரும் எடுக்க வில்லை. இருந்தபோதும் இங்கிருந்து கற்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு போலீசார் வருசாடு-தேனி சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது குவாரியில் இருந்து உடை கற்கள் கடத்தியது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் கண்ணன் மற்றும் உரிமையாளர் சிவா மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். #Tamilnews
பழனி:
பழனி அருகே உள்ள அய்யம்புள்ளி குளத்தில் நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் பிரசன்னா, வருவாய் ஆய்வாளர் பிரபு சிவசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது குளத்தில் 4 டிராக்டர்களில் மண் எடுக்கப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் வருவதைக் கண்ட டிராக்டர் டிரைவர்கள் ஏற்றிய மண்ணுடன் விரைவாக தப்பிச் செல்ல முயன்றனர். இதில் 2 டிராக்டர்களை சம்பவ இடத்திலே வருவாய்த்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். மற்ற 2 டிராக்டர்களில் மண் எடுத்து தப்பிச் சென்று விட்டனர்.
பிடிபட்ட 2 டிராக்டர்கள் பழனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் விசாரணை நடத்தியதில் மற்றொரு டிராக்டரையும் வருவாய்த்துறையினர் பிடித்தனர். மேலும் மண் அள்ளிச்சென்ற ஒரு டிராக்டரை தேடி வருகிறார்கள்.
மானாமதுரை:
மானாமதுரை கண்மாய் பகுதியில் சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வருவாய் ஆய்வாளர் அருள்ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து மற்றும் பணியாளர்கள் கண்மாய் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு டிராக்டரில் சிலர் மணல் எடுத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து மானாமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த டிராக்டர் கீழமேல்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோனைதேவன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு பகுதியில் ஆறு, குளம், நீரோடைகளில் மணல் கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
விவசாயிகளுக்காக அரசு சார்பில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சில கும்பல் ஜே.சி.பி. மூலம் அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருகிறது. இதனால் நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இப்பகுதியில் லாரிகளில் அதிகளவில் உரிமம் இல்லாமல் மணல் அள்ளிச் செல்கின்றனர். அதிகாரிகளும் அவ்வப்போது இவர்களை கண்காணித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை.
தாடிக்கொம்பு பகுதியில் உள்ள குடகனாற்றில் மணல் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. ஆர்.டி.ஓ. ஜீவா தலைமையில் அலுவலர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது டிராக்டரில் ஒருவர் மணலை அள்ளிக் கொண்டு வந்தார். அதிகாரிகளைக் கண்டதும் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்