search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractors seized"

    • புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • விசாரணை நடத்தி 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி கால்வாயின் அருகே பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தின் அருகே பெத்தாம்பாளையம் பகுதியில் இருந்து சூரியம்பாளையம் பகுதிக்கு செல்ல புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த தார் சாலை அமைக்கும் பணிக்காக பொதுப்பணி த்துறைக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மண்ணை பேரூராட்சி துணை தலைவர் தன் நிலத்துக்கு பயன்படுத்தாக கூறி அதிகாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கச்சியை சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் ராயல் சரவணன் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த புகாரைத்தொடர்ந்து பெருந்துறை இஸ்பெக்டர் மசுதா பேகம் நேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து தங்கவேலுவிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர் தப்பி ஓடி தலைமறை வானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

    களம்பூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    களம்பூரை அடுத்த கீழ்பட்டு பகுதியில் ஆற்று மண் மற்றும் சூளைமண் கடத்தி வருவதாக களம்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது வம்பலூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 37) என்பவர் மனி வேனில் மணல் கடத்தி கொண்டு வந்தார். இதனையடுத்து போலீசார் தேவராஜை கைது செய்து, மினிவேனை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர்.
    மோகனூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பாலப்பட்டி பகுதியில் கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் தவமணி, கிராம உதவியாளர்களுடன் அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார். உடனே லாரியில் இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். லாரியை பரிசோதித்த போது அதில் மணல் ஏற்றப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    அனுமதியின்றி மணல் கடத்தப்பட்ட போது வழிமறித்ததால் டிரைவர் தப்பி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தவமணி கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த ஓமலூர் அருகே உள்ள தும்பிபாடி கே.கே.பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள். 
    கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை போலீசார் நேற்று கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்த ராமநாதன் (வயது 39) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். 
    ஆண்டிப்பட்டியில் மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்ப்பட்டி போலீஸ் சரகம் எஸ்.எஸ். புரம் ஓடை பகுதியில் மர்ம கும்பல் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 2 டிராக்டர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே போலீசார் டிராக்டர்கள் வழிமறித்து சோதனை போட்டார். இதனை அறிந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த டிராக்டர்களில் மணல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    உடனே 2 டிராக்டர்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணையில் முத்தணப்பட்டியை சேர்ந்த முருகன், நாச்சியார்புரம் உதயகுமார் ஆகியோர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதில் முருகன் கைது செய்யப்பட்டார். உதயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கரூரில் லாரியில் மணல் கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
    கரூர்:

    கரூர் மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் தெரு அருகே நேற்று முன்தினம் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த லாரி டிரைவர், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஞானவேலை (வயது 24) கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். 
    காரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள கீழத்தானியம் ஆற்றுப்பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா மற்றும் அதிகாரிகள் கீழத்தானியம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    அப்போது சூரப்பட்டியில் அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
    சங்கராபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வரஞ்சரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வரஞ்சரம் அசகளத்தூர் பகுதியில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சங்கராபுரம் அருகே உள்ள மலைகோட்டாலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்பதும், அவர் டிராக்டரில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பகண்டை பகுதியில் உள்ள ஆற்றில் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த ராயபுரம் பகுதியை சேர்ந்த டேவிட் (24) என்பவரை பகண்டை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    ×