search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traditional Food"

    • பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
    • வாழைத்தண்டு துவையல், வாழைப்பூ ஊறு காய்க்கு அதிக வரவேற்புள்ளது.

    புதுச்சேரி:

    பாரம்பரிய உணவு வகைகளை மீட்கும் நடவடிக்கையில் சர்வதேச இயற்கை அறக்கட்டளை என்ற சமூக அமைப்பு களம் இறங்கியுள்ளது.

     கிராம பெண்களுக்கு வேலை கொடுப்பதுடன் அவர்கள் மூலம் பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலையில் புதுவையை அடுத்த கூனிமேடு கிரா மத்தில் இயற்கை சூழலில் பெண்கள் பழச்சாறு, பழங்களின் ஜாம்,கீரை மற்றும் காய்கறிகளை கொண்டு துவையல், ஊறு காய், பொடி ஆகியற்றை தயாரித்து வருகின்றனர்.

    வகை வகையான இட்லி பொடி, பழச்சாறு, ஜாம், உறுகாய் ஆகியவற்றை எந்திரங்கள் இன்றி கைகளால் பெண்கள் உருவாக்குகின்றனர்.இங்கு தயாராகும் உணவு பொருட்கள் ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், வனத்துறை, கைவினை கிராமம் ஆகிய இடங்களில் மக்கள் விரும்பி வாங்கு கின்றனர். அதிலும், இவர்கள் தயாரிக்கும் வாழைத்தண்டு துவையல், வாழைப்பூ ஊறு காய்க்கு அதிக வரவேற்புள்ளது.

    2019-ல் 2 பெண் தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட பாரம்பரிய உணவு தயாரிப்பு தொழிலில் தற்போது 15 பெண்கள் பணியாற்று கின்றனர்.

    • தாசிம்பீவி மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    • சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், கிரியேட் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது, கல்லூரி ஊட்டச்சத்து துறை தலைவர் முத்துமாரி ஈஸ்வரி வரவேற்றார்.

    நஞ்சில்லா இயற்கை உணவு பற்றியும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக பாரம்பரிய பண்பாட்டு உணவில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச் சத்துக்கள் மற்றும்சமைக்கும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப் பட்டது. அதில் கேழ்வரகு மிக்ஸர், கேழ்வரகு கூழ், வரகு டோங்கா, உளுந்து களி போன்ற வித விதமான பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அசத்தினர். சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்புல்லாணி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித் திட்டம் சார்பில் சிறு குறு தானியங்களில் திண்பண்ட சத்துப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது.

    கிரியேட் தொண்டு நிறுவன தலைவர் துரைசிங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை டாக்டர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கலா, கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், பாக்கர் அலி, இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார். ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான், துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமண அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்று பேசினார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.

    பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு சமூக நலன் மற்றும் பெ ண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். சத்தான ஆகாரம் எது என்று பார்த்து சாப்பிட வேண்டும். இதுபோன்ற சில குறைபாடுகள் இருப்பதால் 51சதவீத பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது.

    தற்போது கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் ரத்தம் ஏற்றி கொள்கின்ற னர். இது போன்ற குறை பாடுகள் வராமல் இருப்பதற்கு காய்கறி வகைகள் நவதானிய வகைகள் அதிக அளவில் சாப்பிட வேண்டும்

    அங்கன்வாடி பணியாளர்கள் கழிவு பொருட்களில் இருந்து பல தத்ரூபமான பொருட்களை தயாரித்திருக்கிறார்கள். மேலும் ஊட்டச்சத்து உணவுகள் தயாரிப்பதிலும், குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளுக்கான பயிற்சி எடுத்தவர்கள், கைதேர்ந்தவர்களாக உள்ளார்கள். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை களுக்கு திறமையாக கற்றுக்கொடுக்கிறார்கள். குழந்தைகளை அறிவாற்றல் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். முதல்-அமைச்சர் இதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    சமூக நலத்துறை சார்பாக ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளையும், குறை வான குழந்தைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதற்காக ஒரு செயலி உருவாக்கி அங்கன்வாடிகளில் உள்ள 38 லட்சம் குழந்தைகளின் வயது, எடை, முகவரி மற்றும் எல்லா பிரச்சனையையும் பதிவேற்றும் செய்து வைத்துள்ளோம். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது.

    ஊட்டச்சத்து குறைவா னவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விரைவில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகள் காலை உணவை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணி யாளர்கள் சிறப்பான முறையில் பணி யாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உதவி சித்த மருத்துவர் ஸ்ரீதேவி, ஹோலிகிராஸ் கல்லூரி போராசிரியர் மாரிதங்கம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இளங்குமரன், செயலாளர் ஜீவன் ஜேக்கப், குழந்தை வளர்ச்சி திட்ட ஊரகம் அலுவலர் திலகா, உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக்ராஜா நன்றி கூறினார்.

    • கருத்தரங்கிற்கு முன்னாள் நகராட்சி உறுப்பினர் அண்ணா வியப்பன் தலைமை தாங்கினார்.
    • இயற்கை வேளாண் ஆய்வாளர் எழுத்தாளர் பாமயன் பங்கேற்று பாரம்பரிய உணவு குறித்துப் பேசினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் திருக்குறள் தமிழோசை அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் பாரம்பரிய உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னாள் நகராட்சி் உறுப்பினர் அண்ணா வியப்பன் தலைமை தாங்கினார்.

    அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்கனககுரு முன்னிலை வகித்தார்.இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்ராம் அறிமுக உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து இயற்கை வேளாண் ஆய்வாளர் எழுத்தாளர் பாமயன் பங்கேற்று பாரம்பரிய உணவு குறித்துப் பேசினார். சங்கரநாராயணன் வாழ்த்திப் பேசினார். தலைமையாசிரியர் சாந்தி வரவேற்றார். வனமதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திருக்குறள் தமிழோசை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    ×