search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • உக்ரைனுக்கு மேலும் 1.80 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
    • அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகளும் இதில் அடக்கம்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.

    உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
    • கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்தப் போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கே அமைந்த பக்முத் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி பயணம் மேற்கொண்டார். அங்கு போரில் தீரத்துடன் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் அளித்து கவுரவித்தார்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது.
    • அடுத்த ஆண்டுக்குள் இந்த போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஐ.நா.பொது செயலாளர் கூறினார்.

    நியூயார்க்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷியாவுக்கு ஐ.நா. சபை, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை நிராகரித்து ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இரு நாட்டு அதிபர்களைச் சந்தித்து பேசினார். உக்ரைன் ரஷியா போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.

    இந்நிலையில், உக்ரைன் ரஷியா இடையிலான போர் 2023-ல் முடிவுக்கு வரும் என ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர்

    அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக குட்டரெஸ் நேற்று நடந்த மாநாட்டில் பேசுகையில், உக்ரைனில் எதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை தான் காணவில்லை. ஏற்கனவே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் தொடரும்.

    ஆனால் 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். இது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
    • ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷியா, பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஏராளமான ஏவுகணைகளை ஏவி உக்ரைனை நிலைகுலையச் செய்தது. அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது. அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 4 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா கூறி உள்ளது.

    பெல்கோரோட் பிராந்தியத்தின் வான்வெளியில் நான்கு அமெரிக்க 'ஹார்ம்' ராடார் எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பிராந்தியம் உக்ரைன் தாக்குதல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
    • ரஷிய ராணுவம் பிடித்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.

    கீவ்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் 10 மாதமாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 60 முதல் 70 வரையிலான குண்டுகளை வீசியதாகவும், மின்நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெற்றது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • அப்போது, உக்ரைன் போரில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்தினார்.

    புதுடெல்லி:

    இந்தியா, ரஷியா உச்சிமாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்த உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக இந்தியா, ரஷியா உச்சி மாநாடு குறித்த அறிவிப்பை ரஷியா வெளியிடவில்லை.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என மோடி வலியுறுத்தி உள்ளார்.

    ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றது குறித்தும், இந்தியா-ரஷியா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், ரஷிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் தொடர்பான ரஷியாவின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள்.
    • அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:-

    போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

    அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை.

    இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர் என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
    • கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது.

    அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்தார்.

    • உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

    ரோம் :

    உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

    அதை தொடர்ந்து, உரையாற்றிய போப் ஆண்டவர் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

    அப்போது அவர், "உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் நீண்டகாலமாக இறைவனிடம் கேட்டோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.

    இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    • உக்ரைனுக்கு கூடுதலாக 275 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
    • இதுவரை 19 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.

    ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.
    • போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

    இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் இதுபற்றி தெரிவிக்கையில், "மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது" என்றார்.

    • உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • இதைத் தொடர்ந்து மக்களுக்கு மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்த போரானது 9 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், ரஷியா உக்ரைன் மீது ராக்கெட்டுகளை கொண்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    இதையடுத்து, உக்ரைனின் கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ கூறுகையில், தலைநகரின் உட்கட்டமைப்பு ஒன்றின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ரஷிய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய புகைப்படங்களை வெளிவிவகார துணை மந்திரி எமினே ஜெப்பார் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அதன்படி, குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின்சாரம் இன்றி துண்டிக்கப்பட்டுள்ளன. கீவ் மற்றும் அருகேயுள்ள மோல்டோவா உள்ளிட்ட பல நகரங்களில் ராக்கெட் தாக்குதலுக்கு பின்னர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    ×