என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ukraine russia war"
- உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை
- ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷியாவுக்கு மட்டுமே உள்ளது ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷியா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடினர். ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சர், செர்ஜி ஷோய்கு, உக்ரைன் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலசை தொலைபேசியில் அழைத்தார்.
அப்போது, கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என்று ரஷியா கவலைப்படுவதாக ஷோய்கு வாலஸிடம் தெரிவித்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் ரஷியா வழங்காத போதிலும், உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷியா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் தரப்பு மறுத்துள்ளது.
இதேபோல் ரஷியாவின் கவலை மற்றும் குற்றச்சாட்டை உக்ரைனும் மறுத்துள்ளது. ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷியாவுக்கு மட்டுமே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனே வெளியேறுங்கள் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீவ்:
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது. எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷியாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிபர் புதின் தெரிவித்தார். இதனால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கெர்சன் நகரில் இருந்து மக்கள் சிலர் படகு மூலம் வெளியேறினர்.
இந்நிலையில், போர் தீவிரமடைந்து வருவதால், இந்திய அரசு அவசர அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, உக்ரைனில் மோசமான பாதுகாப்பு நிலைமையை மேற்கோள் காட்டி, இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தற்போது உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
- ரஷியா உக்ரைன்மீது போர் தொடுத்து 7 மாதம் கடந்துள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியம் 15,000 உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.
லக்சம்பர்க்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளைச் செய்துவருகின்றன. மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு ராணுவ ஆதரவை அதிகரிக்க உள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் 15,000 உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்களுக்காக 500 மில்லியன் யூரோக்களை கூடுதலாக வழங்க உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் லக்சம்பேர்க்கில் நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான முக்கிய முடிவுகளில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது.
- போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் உறுதியளித்தார்.
ஏற்கனவே, கடந்த வாரம் அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 625 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்துள்ளது.
- அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன என அதிபர் புதின் தெரிவித்தார்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஏழு மாதம் கடந்தும் போர் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைனில் கைப்பற்றிய கிழக்கு மற்றும் தெற்கே உள்ள 4 பிராந்தியங்களை கடந்த 1-ம் தேதி ரஷியாவுடன் இணைத்துக் கொண்டார் அதிபர் புதின்.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் கஜகஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணவேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுமே எங்களின் நட்புறவு நாடுகள். அவர்களின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்துள்ளேன்.
இதில் உக்ரைனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டியது அவசியம். எனவே இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவர்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் தனது ஆதரவை அளித்தன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.
- உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது
- அங்கு குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கீவ்:
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷியா அரங்கேற்றி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உக்ரைனில் உள்ள நிலை குறித்து தூதரகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
- குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
- உக்ரைன் தலைநகரில் குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கிரீமியா பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.
பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷியா அரங்கேற்றி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு ரஷியா முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
கீவ் தவிர மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறி உள்ளது.
- தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது தீப்பொறி பறந்து தீப்பற்றியது.
- பாலத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பு பொறுப்பேற்கவில்லை.
மாஸ்கோ:
ரஷியாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதி இணைக்கப்பட்ட பின்னர், ரஷிய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி 2018-ம் ஆண்டு திறந்து வைத்தார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலம் ஆனது ரஷியாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2020-ம் ஆண்டு முழு அளவில் இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஒரு லாரியில் வெடிபொருட்களை நிரப்பி அதை வெடிக்க செய்துள்ளனர். இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் பலியாகினர்.
ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீதும் தீப்பொறி பறந்து தீப்பற்றியது. இதில், எரிபொருள் நிரப்பப்பட்ட 7 ரெயில் பெட்டிகள் தீப்பிடித்தன. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குண்டு வெடிப்புக்கு காரணமான அந்த வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் என்று ரஷியாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிரிமியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர், குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். எனினும் உக்ரைன் தரப்பு இதற்கு பொறுப்பேற்கவில்லை.
இச்சம்பவம் குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறுகையில், "சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும், திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்குத் திரும்ப வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும்.
- உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வரும் நிலையில், ரஷிய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ரஷிய மொழியில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆயுதங்களை கீழே போடும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய வீரர்கள் தங்கள் நாட்டை இன்னும் சோகத்தில் இருந்தும், ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் போர் குற்றவியல் வழக்கில் இருந்து நீதியை பெற்றுத் தருவோம் என்றும் ரெஸ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் ஏழு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது.
- போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, உக்ரைனுக்கு மேலும் 625 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என் உறுதியளித்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பிரதமர் மோடி உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைன், ரஷியா இடையேயான பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண உதவுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது.
- போரில் கைப்பற்றிய உக்ரைனின் 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்தது.
ரோம்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 200 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இந்தப் பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவீதம் ஆகும். சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வன்முறை சுழலை நிறுத்தும்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுர்க்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சுழலை நிறுத்தும்படி நிறுத்தும்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கேட்டுக்கொள்கிறேன். அணு ஆயுத யுத்த ஆபத்து அபத்தமானது. தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்