என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "water levels"
- வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பான முறையில் நீர் நிலைகளை பயன்படுத்த வேண்டும்.
- விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்ததது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பி.எம்.கிஷான் உதவித் தொகை, பயிர் காப்பீடு, தரிசு நில திட்டம், கொப்பரை கொள்முதல், சொட்டு நீர் பாசனம், பயிர்களை அழிக்கும் வன விலங்கு களை கட்டுப்படுத்துதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங் களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாது காத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாது காத்திடவும், விவசாயிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றி தழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், விவசாயிகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். தங்களது கால்நடைகளையும் பாதுகாப்பான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். மேலும், மழை யினால் கிடைக்கப்பெறும் நீரினை முறையாக பயன் படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால் துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 51.87 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,269.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்கு 90 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டு நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து நீர் வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்றனர்.
- நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள 204 பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் ஊராட்சிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பேசப்பட்டது. மேலும் ஊராட்சி தலைவர்கள், ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஆலோசனை களும் வழங்கப் பட்டது.
தொட ர்ந்து கலெக்டர் விஷ்ணு தலைமையில் போதை யில்லா நெல்லையை உருவாக்கும் வகையில் அனைத்து ஊராட்சி தலைவ ர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் விஷ்ணு பேசிய தாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர், தலைவிகள் சப்ஸ்டியூட் இன்றி இயங்கும் வகையில் இந்த கூட்டம் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊரக உள்ளாட்சி துறை தாண்டிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்விக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 2023- ம் நிதி ஆண்டுக்குள் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பள்ளிகளில் பூர்த்தி செய்து தேவை என்பது குறித்து வேண்டுகோள் வைக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும். ஊராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையாக ஸ்மார்ட் வகுப்பறை என்பது தற்போதைய சூழலில் உள்ளது.
ஒரு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை என்ற திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியுடன் அமைக்க ஊராட்சித் தலைவர்கள் முயற்சி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஊராட்சி தலைவர்கள் பங்களிப்பு அதிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. நெல்லை மாவட்டம் நீர் மேலாண்மைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இருக்கும் நீர் நிலைகளை 2024-ம் ஆண்டுக்குள் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் நீர் மேலாண்மைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டமாக நெல்லை மாவட்டத்தை மாற்றும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி தலைவர் களும் உறுதி ஏற்று செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
- விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம், பொன்னிவாடி கிராமத்தில் உள்ளது நல்லதங்காள் ஓடை அணை.இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஓடையின் நீர்த்தேக்க பகுதியில், சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை துவக்கினார். பொன்னிவாடி கிராமத்தில் உள்ள அந்த அமைப்பின் கிளை சார்பில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடந்துவருகிறது.
சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மூலனூர் அருகே கோணேரிப்பட்டி கிராமத்தில் இருந்து, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பால்ராசு, தற்போது இமாச்சலபிரதேசம் சிம்லா மாவட்ட கலெக்டராக இருக்கிறார். விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
பால்ராசு கூறுகையில், அணைக்கட்டு மொத்தம் 937 ஏக்கரில் அமைந்துள்ளது.அவற்றில் 800 ஏக்கர் அளவுக்கு சீமைக்கருவேல மரம் வளர்ந்துள்ளது. அவற்றை முழுமையாக அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் தான் அழியாத சொத்து.அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் 'நமது சொத்து' என்று பராமரிக்க வேண்டும் என்றார்.
- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது.
- நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருப்பூர் :
உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில்வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில், இம்மாவட்டங்களை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் பருவமழை பெய்து வருவதன் மூலம் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், திருவள்ளூர், இராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. அமராவதி அணையின் முழு கொள்ளவான 90 அடியினை எட்ட உள்ள நிலையில், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளத்திற்கும், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் முத்தூர் கதவணைக்கும் எந்த நேரத்திலும் மேலும் வெள்ள நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- பரவலான மழையால் முன்னெச்சரிகை நடவடிக்கை தீவிரம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள் ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 28 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
ஆண்டியப்பனூர் அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
ஏலகிரிமலை, ஜவ்வாது மலைகளில் கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டம் முழு வதும் உள்ள நீர்வரத்து கால்வாய் களை தூர்வார வேண்டும். நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ளபெரிய ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. இதையடுத்து, ஏரி பகுதியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், பருவமழை தீவிரமடைந்து வருவதால் நீர் நிலைகளை தொடர்ந்து கண் காணிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் நகராட்சி ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை யும், திருப்பத்தூர் வனச்சரக அலு வலக வளாகத்தில் மாவட்ட மைய நூலக கட்டிடம் கட்டுவதற்கானஇடத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து, ஜோலார் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி, அசோக் நகர் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் ஆய்வு செய்தார். பிறகு, மாணவர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவை கலெக்டர் பரிசோதனை செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, திருப்பத் தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .
- சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பேரணி ,விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சைக்கிள் பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பரமசிவம்பாளையம் வரை சென்று பின்னர் மீண்டும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த சைக்கிள் பேரணிக்கு சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து "என் குப்பை எனது பொறுப்பு " என்ற தலைப்பில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது . இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ,மாணவிகள் "நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம்" என்ற வாசகத்தை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பள்ளபாளையம் குளம் அருகே நிறைவடைந்தது.
பின்னர் பள்ளபாளையம் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .இந்த சைக்கிள் பேரணி,விழிப்புணர்வு ஊர்வலத்தில் சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள்,சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான வேலுச்சாமி, தயாளன் வினோஜ்குமார், பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, பிரியா, பெரியசாமி, துளசிமணி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை:
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த 9-ந் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்றும், காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தர விட்டுள்ளார். இதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் நேரடி கண்காணிப் பில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை வழங்குவார்கள். வெள்ளம் சம்பந்தப்பட்ட தகவல்களை தண்டோரா மூலமும், ஊடகங்கள் மூலமாகவும் வருவாய்த்துறை வழங்கும். எனவே அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.
கடந்த 2015-ம் ஆண்டில் நூற்றாண்டு காலம் இல்லாத அளவிற்கு மழை பெய்தது. அந்த மழையையே சமாளித்தோம். எப்பபடிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்நோக்க தயார் நிலையில் தமிழக அரசு இருக்கிறது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே இன்றும், நாளையும் இரு தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் குறிப்பாக வட ஆந்திர கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். குழந்தைகள் காவிரி கரையோர பகுதிகளில் குளிப்பது, விளையாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. நீர் நிலைகளில் செல்போன் மூலம் ‘செல்பி’ போட்டோ எடுப்பதையும் மக்கள், இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி கூறியதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், சங்கிலி பள்ளம் ஓடை, வீரபாண்டி ஓடை, ஜம்மனை ஓடை, சின்னக்கரை ஓடை, நல்லாறு ஓடை மற்றும் பிற நீர்நிலைகளின் கரையோரங்களிலும், சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும், பாய்லர் சாம்பல், சாய கழிவுகள், பின்னலாடை நிறுவன கழிவுகள், பிரிண்டிங் கழிவுகள், பேக்கே ஜிங் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிற தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானக்கழிவுகள், வணிக வளாக கழிவுகள் ஆகியவை பகல் மற்றும் இரவு நேரங்களில் கொட்டப்படுவதாலும் நீர் நிலைகள் மாசுபடுகின்றது.
சில நேரங்களில் இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் சமூக அக்கறை இல்லாத விஷமிகளால் தீ வைக்கப்படுகின்றது. இதனால் காற்றும் மாசடைகின்றது.
இவ்வாறு திடக்கழிவுகளை கொட்டும் தனி நபர்கள், வாகனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் விடுதிகள் மீது நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு சட்டங்களின் மூலமாகவும், உள்ளாட்சி விதிகளின் மூலமாகவும் மோட்டார் வாகன சட்டத்தின் மூலமாகவும், காவல் துறையின் மூலமாகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, திருப்பூர் வடக்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் திருப்பூர் முதலிபாளையம் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்தில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனங்களும் மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் காங்கயம் குட்டப்பாளையம் நொய்யல் ஆற்றின் அருகில் சாயக் கழிவுகளை வெளியேற்றிய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவ்வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து சம்பந்தப்பட்ட அனைவரும் உருவாகின்ற அனைத்து திடக்கழிவுகளையும், செப்டிக் டேங்க் கழிவுகளையும் நகராட்சி நிர்வாகம் மூலமாகவும், மறு சுழற்சி முறையிலும் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்