என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman kidnapping"
- தாலி கட்டிய பிறகு மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
- போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் சினேகா திருமணம் நடந்தது.
தாலி கட்டிய பிறகு சினேகா மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல திருமண மண்டபத்தில் ஒரு புறம் விருந்து நடந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டார் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சினேகாவின் தாய் மற்றும் அவருடைய சகோதரர் திடீரென திருமண மண்டபத்திற்கு வந்தனர்.
மணப்பெண் அறையில் காதல் கணவருடன் இருந்த சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார். அதனை பார்த்து திடுக்கிட்ட அவருடைய நண்பர்கள் தடுக்க முயன்றனர். அவர்களை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார்.
சினேகாவை அவரது சகோதரர், தாயார் இருவரும் சேர்ந்து மண்டபத்திற்கு வெளியே இழுத்து செல்ல முயன்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் அவர்களை சூழ்ந்து கொண்டு விடாமல் தடுத்தனர்.
அவர்கள் மீது மிளகாய் பொடிகளை தூவினர். மேலும் நாற்காலிகளை தூக்கி வீசி அடித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சல் குழப்பம் அலறல் சத்தம் என களேபரம் ஏற்பட்டது.
சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து இழுத்துச் சென்றார். கணவர் அவரைவிடாமல் பிடித்துக் கொண்டார். இருவரையும் சேர்த்து தரதரவென இழுத்து சென்றனர்.
இதை தடுக்க முயன்ற மாப்பிள்ளையின் நண்பர் ஒருவரை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் இதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இது குறித்து மணப்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர்.
அப்போது அவர் தன்னை கட்டாயப்படுத்தி தாய் மற்றும் சகோதரர் இங்கிருந்து கடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மீது தாக்குதல், கடத்தல் முயற்சி, மணப்பெண்ணின் நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மிளகாய் பொடி தூவி தாக்கி மணப்பெண்ணை கடத்த முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர்
புதுக்கோட்டை:
விராலிமலை ஊராட்சி ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ஈஸ்வரி (வயது 32). இவரது சகோதரி விஜயலட்சுமி என்கிற ரோகினி (26). இவருக்கு விராலிமலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மதியழகன் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து ேவறுபாடு காரணமாக ஈஸ்வரி வீட்டிற்கு விஜயலட்சுமி வந்துள்ளார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரி விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்."
கும்பகோணம் அருகே கொரநாட்டுக் கருப்பூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சதீஸ்(வயது26). சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபசக்தி(24). பி.டெக். படித்துள்ளார்.
இந்த நிலையில் சதீசும், சுபசக்தியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காதலியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் சிங்கப்பூரில் இருந்து சதீஸ் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து காதலியின் தாயிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றுள்ளார். இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள சுபசக்தியின் தாயார் மாதவி ஒப்புகொண்டார்.
பின்னர் எப்படியோ இருவீட்டார் சம்மதத்தின் பேரில் காதல் ஜோடிக்கு திருநாகேஸ்வரம் ஒப்பி லியப்பன் கோவிலில் திருமணம் 20-ந்தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்தது. அதன்பேரில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.
இந்த நிலையில் 19-ந்தேதி இரவு மண்டபத்துக்கு மணமகள் வரவில்லையாம். அப்போது சதீசுக்கு போன் செய்த சுபசக்தி, தனது தந்தை திடீரென திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்து என்னை கடத்தி சென்று தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.
இந்த திருமணத்தை நிறுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சுபசக்தி கூறி அழுதுள்ளார். இதையடுத்து காதலி சுபசக்தியின் தந்தை ரவிக்கு போன் செய்த சதீஸ் இது பற்றி கேட்டபோது, தனது மகளை திருமணம் செய்ய வேண்டுமானால் பணம் தரவேண்டும் என்று அதிக தொகை கேட்டதால் சதீஸ் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து நேற்று கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்ற சதீஸ், காதலியின் பெற்றோர் சம்மதத்தின் பேரில் திருமண ஏற்பாடுகளை செய்த நிலையில் திடீரென அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தனது காதலியை கடத்தி சென்று எங்கோ அடைத்து வைத்துள்ளனர். அவரை கண்டுபிடித்து திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று புகார் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப சக்தியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த 15 வயது மைனர் பெண் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி சந்தை கரையில் உள்ள அத்தை வீட்டில் தங்கி இருந்தார். இவரது தாயாரும் அங்கேயே இருந்தார்.
சம்பவத்தன்று குறிச்சி பெரிய வாய்க்காலில் இளம்பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது பெருந்துறை அடுத்த குஞ்சரமடை சத்யாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்த இளம்பெண்ணை அழைத்து திடீரென மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதை கண்ட மற்ற பெண்கள் இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் விஷயத்தை சொன்னார்கள்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணுக்கும், திவாகர் என்பவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாயார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் ஜெகதீஸ், லோகேஸ்வரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்