search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wood"

    • வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது.
    • இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் சிந்து ஊர் என்ற இடத்தில் நேற்று ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அடர்ந்த வனப்பகுதியில் கருப்பு நிறத்தில் இருந்த மரத்தைக் கண்ட வன அலுவலர் நரேந்திரன் தனது ஊழியர்களிடம் மொட்டு போல் உள்ள இடத்தில் கத்தியால் வெட்ட கூறினார்.

    வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.

    மரம் தனது தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்றும் முதலையின் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா என தெரிவித்தார்.

    தண்ணீரை சுவைத்து பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல எனவும் கூறினார். 

    • மகுடஞ்சாவடி வட்டார வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய சட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின்‌ கீழ்‌ தேசிய சமையல்‌ எண்ணெய் வித்து இயக்கத்தில்‌ மர எண்ணெய் வித்துப் பயிர்கள்‌. சாகுபடி திட்டத்தில்‌ விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பமிற்சிக்கான ஏற்பாடுகளை மகுடஞ்சாவடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள்‌ மற்றும்‌ அட்மா திட்ட பணியாளர்கள்‌ செய்திருந்தனர்‌.

    மகுடஞ்சாவடி:

    மகுடஞ்சாவடி வட்டார வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய சட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின் கீழ் தேசிய சமையல் எண்ணெய் வித்து இயக்கத்தில் மர எண்ணெய் வித்துப் பயிர்கள். சாகுபடி திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் வரவேற்றார்.

    சேலம் வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம் பமிற்சிமினை தொடங்கி வைத்து பேசினார். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் கலைச்செல்வி அவர்கள் மரப்பயிர்கள் சாகுபடி, இயற்கை,வேளாண்மை. குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரி முதல்வர் பார்த்திபன் இணைய வழியாக விவசாயிகளுக்கு உகந்த மரப்பயிர்கள், அவற்றின் சாகுபடி தொழில் நுட்பங்கள், சந்தைப்படுத்துதல், விற்பனை

    வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    பயிற்சியில் உழவன் - செயலி பயண்பாடு, மண்மாதிரி, எடுத்தல், நுண்ணிர்பாசனம், துணை நீர்பாசன மேலாண்மை செயல்பாடுகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், நுண்ணூட்ட சத்து, பயன்பாடு குறித்து கருத்துக்காட்சி சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது.

    பமிற்சிக்கான ஏற்பாடுகளை மகுடஞ்சாவடி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். முடிவில் வட்டார வேளாண்மை அலுவலர் பழனிசாமி நன்றி கூறினார்.

    • பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது.
    • நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுகா கோவிந்தகுடி, ஆவூர் இடையே உள்ள பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நூற்றாண்டு பழமையான தூங்குமூஞ்சி மரத்திற்கு மர்ம நபர்கள் யாரோ வைத்த தீயால் மரம் முற்றிலுமாக எரிந்து கருகி சாய்ந்தது . அம்மரத்தை ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நிழல் தரும் வகையில் இருந்த மரம் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே கவலை அடைய செய்தது.

    • எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது அவரது கைபட்டதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே இறந்தார்.
    • தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது42) .

    இவர் சம்பவத்தன்று ் அருகில் இருந்த முருங்கை மரத்தில் ஏறி கிளைகளை வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியின் மீது அவரது கைபட்டதில் மின்சாரம் தாக்கி மரத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×