என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சப் கலெக்டர்"
- நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டு கொண்டிருந்தார்.
- விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்
பொன்னேரி:
பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் திடிர் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு, புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டிருந்தார்.
பின்னர் உள் நோயாளிகள் பிரிவில் பெண்கள் சிகிச்சை பெற்று வரும் பகுதிக்கு சென்று விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட சுகாதார துறை துனை இயக்குநர் சேகர், தலைமை மருத்துவர் அசோகன்,பொன்னோரி நகராட்சி ஆனையர் கோபிநாத், நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், டாக்டர்கள் பெனடிக், விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
- மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர்.
பல்லடம் :
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் கனகராணி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டாக்டர் சுபா வரவேற்றார்.
இதில் கலந்துகொண்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பல்லடம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும், எதற்கெடுத்தாலும் திருப்பூர், கோவை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், போதுமான மருத்துவர்கள் இருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சப் கலெக்டர் கூறினார். பின்னர் அவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பழைய துருப்பிடித்த கட்டில்கள் மற்றும் சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு பயன்பாடற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் அரசு மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் கட்டாயம் அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும், பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் முன்னெச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் தலைமை டாக்டர் ராமசாமி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள்,அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
- நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.
இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
- 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.
- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
பல்லடம் :
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து துறையின் கீழ் உள்ள பள்ளி வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருப்பூர் வட்டார போக்குவரத்து துறைக்கு உட்பட்ட பல்லடம்,காங்கயம் பகுதியைசேர்ந்த 350 பள்ளி வாகனங்களுக்கான தகுதி ஆய்வு பல்லடம் கரையாம் புதூர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வாகனங்களை திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதில் பள்ளி வாகனங்களில் படிக்கட்டுகளின் உயரம், அதன் நிலை, டிரைவர் அமரும் பகுதி, வாகனத்தின் உள்ளே நடைமேடை பகுதி, தீயணைப்பு கருவி, முதலுதவி கருவி, மாணவர்கள் அமரும் இருக்கை வசதி, தீயணைப்பு சாதனம் மற்றும் அவசரவழி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? வாகனத்தின் முன்னால், பின்னால் பள்ளியின் பெயர், தொடர்பு எண், இ-மெயில் முகவரி எழுதப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு செய்யப்பட்ட 350 வாகனங்களில், 110 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அந்த வாகனங்களில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் வரும் 29ந் தேதி மறு ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு முறை குறித்து ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஆனந்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேல்மணி, ஈஸ்வரன், மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வுப்பணியில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் விறுவிறுவென ஏறி இறங்கினார். அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் மற்ற அதிகாரிகள் ஓட்டமும் நடையுமாய் உடன் சென்றனர்.
- இ-சேவை மையத்தில் எந்திரம் பழுது
- பொதுமக்கள் தங்களின் அவலநிலை குறித்து வாக்குவாதம் செய்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் பத்ப நாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவட்டார் அருகே கிராம நிர்வாக அலு வலக வளா கத்தில் இ- சேவை மையம் செயல் பட்டுவருகிறது இங்கு திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டு மல்லாது கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட மலைவாழ் பகுதிகளில் இருந்தும் பல்வேறு மக்கள் ஆதார் திருத்தம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த இ-சேவை மையத்தில் பதிவு இயந்திரம், பிரிண்டர் எந்திரம் பழுதாகி பல மாதங்களாகியும் சரி செய்யாததால் மலையோர பகுதிகளில் இருந்து பல கிலோமீட்டர் பயணம் செய்து தங்கள் கைகுழந்தைகளுடன் வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முறையாக செயல்படாத இ-சேவை மையத்தை நம்பி வரும் பொதுமக்களை இங்குள்ள ஊழியர்கள் காலை முதல் மாலை வரை காத்திருக்க வைத்து பின்பு அலைகழிக்கும் அவலநிலையும் ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை இ-சேவை மையம் வந்த பொதுமக்களிடம் எந்திரம் பழுது என ஊழியர்கள் கூறிய நிலையில் இ-சேவை மையத்தின் வெளியே பொதுமக்கள் கைகுழந்தைகளுடனும் முதியவர்களும் காத்தி ருந்தனர் அப்போது பல்வேறு ஆய்வு பணிக்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பத்பநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் வந்தார். இதையடுத்து அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தங்களின் அவலநிலை குறித்து வாக்குவாதம் செய்தனர்.
அதை தொடர்ந்து இ-சேவை மையத்தில் ஆய்வு செய்த சப்-கலெக்டர் கவுசிக் அனைத்து வசதிகளுடன் இ-சேவை யைம் செயல் படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
- குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
பல்லடம் :
பல்லடம் தாலுகா பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் வடுகபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், சித்தம்பலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.
இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
- மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும் போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள்.
திருப்பூர் :
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் பங்கு சிறப்பாக இருக்க வேண்டும். மாணவா்கள் முழுமையான அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவையாற்றும்போது சமுதாயத்தில் மதிக்கப்படுவாா்கள். அதே வேளையில், மாணவா்கள் சேவை மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும்போது மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்திவிட்டு மற்ற நேரங்களில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்றாா்.இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
- சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
- இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
- புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ரீஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், இச்சிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக், இச்சிப்பட்டி வருவாய்த்துறை அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்துமுட்டிபாளையம் பகுதியில் உள்ள 5 ஏக்கர் 66 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.
அப்போது 5 ஏக்கர் 66 சென்ட் இடத்தில் கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை சப் கலெக்டர் பார்வையிட்டார். அவரிடம் கொத்துமுட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் , கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் இந்த இடத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் சுமார் 6000 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம் .மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களை அழித்துவிட்டு வீட்டுமனை பட்டா வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
சப் கலெக்டர் வரும் தகவலை அறிந்த வீட்டுமனை கேட்டு மனு அளித்த கோம்பக்காடு,தேவராயன்பாளையம் புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் காத்திருந்து சப்கலெக்டரை சந்தித்தனர். அப்போது இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சப்கலெக்டரிடம் கொத்துமுட்டிப்பாளையம் பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும்,கொத்துமுட்டி பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வீட்டிற்கு 4 மரங்கள் என பராமரிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.2 தரப்பினரிடமும் "பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சப்-கலெக்டர் கூறி சென்றார்.
- திண்டிவனம் சப்-கலெக்டராக இருந்த அமீத் தெற்கு மண்டல உதவி ஆட்சியரராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.
- கலெக்டர் கட்ட ரவி தேஜா திண்டிவனம் சப்-கலெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
திண்டிவனம் சப்-கலெக்டராக இருந்த அமீத், சென்னை பெருநகர இணை ஆணையர் தெற்கு மண்டல உதவி ஆட்சியரராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, திருவண்ணாமலையில் பயிற்சி சப் -கலெக்டர் கட்ட ரவி தேஜா திண்டிவனம் சப்-கலெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.இதனையடுத்து திண்டிவனம் ஜக்காம்பேட்டையிலுள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில், கட்ட ரவி தேஜா பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- பலியான மீனவர் உடல் இன்று பிரேத பரிசோதனை
- ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது தேங்கா ப்பட்டணம் மீன்பிடித் துறை முகம். இந்த துறைமுகம் கட்டப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
சரியான கட்டமைப்புடன் துறைமுகம் கட்டப்படாத தால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கு 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் அமல்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மீன்பிடி துறைமுக ஏலக் கூடத்தில் வைத்து போராட்டம் நடத்தி னர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், இதுவரை 28 மீனவர்கள் இறந்துள்ளனர். இனியும் தாமதிக்காமல் துறைமுகத்தை உடனே மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றனர். மேலும் பணிகள் தொடங்கிட துறை முகத்தை மூட வேண்டும், உயிரிழந்த வர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, கிள்ளி யூர் தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் விரைந்து வந்து மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். துறைமுகத்தை மூடுவது பற்றியும், நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு இரவு 7.30 மணிக்கு அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்படை க்கப்பட்டது. போலீசார் உடலை பெற்று ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று அமல்ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது.
- திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து கும்பாபிஷேக பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது. நேற்று அரசு விடுமுறை என்பதால் காலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இன்று கொடிமரத்துக்கு மாட்டுவதற்கு தயார் செய்யப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு கலசங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு கணபதிஹோமம், அதிவாசம்விடர்த்தி, உஷபூஜை, உச்சபூஜை, அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம் ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு காணி மடம் மந்திராலயம் யோகிராம் சூரத்குமார் அவர்களின் காணி ஞானி நாமரிஷி தபஸ்வி பஜனை நடை பெறுகிறது.
நேற்று மாலை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை வந்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்லும் பாதைகள், அன்னதானம் நடைபெறும் இடம், பக்தர்கள் வெளியேறும் பாதைகள் ஆகியவற்றை பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அறநிலையத்துறை என்ஜினியர் ராஜ்குமார், கோவில் கண்காணிப்பாளர் ஆணந்த் கோவில் மேலாளர் மோகன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவிலில் மாட்டப்படும் கண்காணிப்பு கேமராக்கள், பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவட்டார் பேரூராட்சி மூலம் தினமும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி ஆகியவற்றையும் தினமும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் காலை மாலை வேளைகளில் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளை தூய்மை படுத்தி வருகிறார்கள். பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், செயல் அலுவலர் மகராஜன் ஆகியோர்களின் மேற்பார்வையில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
கோவில் தந்திரி சஜித்சங்கரநாராயணகுரு மற்றும் அவருடன் பொறுப்பில் இருந்த சுப்ரமணியகுருவிற்கும் குடும்ப சூழல் காரணமாக பூஜைகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கோவில் தந்திரி அவகாசம் கொண்ட வஞ்சியூர் அத்தியற மடத்தை சார்ந்த கோகுல்தந்திரி இரவு பொறுப்பேற்று கொண்டார் அவரின் தலைமையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்