search icon
என் மலர்tooltip icon
    • பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் பறவை காவடிகள் எடுத்தும், மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.
    • முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவோணம்:

    திருவோணத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதில் 9 ஆம் நாள் திருவிழாவாக முத்துமாரி அம்மனுக்கு இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் பால்குடம் காவடிகள் மற்றும் பறவை காவடிகள் எடுத்தும் மாவிளக்கு போட்டு வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மேலும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று 10ஆம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது.

    • கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பேராவூரணி:

    சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முதுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 65) விவசாயி.

    இவரது மனைவி செல்வி (60).

    இருவரும் உறவினர் வீட்டு விழாவு க்காக மணமேல்குடிக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது வல்லவன் பட்டினம் அருகே மீன் ஏற்றி சென்ற லோடு வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவம னைக்கு செல்லும் வழியிலேயே அடைக்கலம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செல்வி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.
    • ரூ.1500-க்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை மாற்றுத்திறனாளியிடம் வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் வசித்து வரும் கதிரேசன் என்பவரின் மகன் சுமன். இவர் 2 கால்களும் செயல் இழந்தவர் (மாற்றுத்தி றனாளி).

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவித்தொகை வேண்டி மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கலெக்டர் மகாபாரதி உட னடியாக மாற்றுத்திறனாளி வீட்டிற்கே சென்று, நலம் விசாரித்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1500-ற்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் ஆணையை வழங்கினார்.

    அப்போது தரங்கம்பாடி தாசில்தார் காந்திமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன்கோயிலில் சொக்கநாதர் பெருமானுடன் எழுந்தருளினார்.
    • தருமபுர ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயாத்திரை மேற்கொண்டார்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக பூஜாமூர்த்தியான சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 11-ம் தேதி ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தரங்கம்பாடி சாலை, மயூரநாதர் சுவாமி கோயில், பட்டமங்கலத்தெரு, வள்ளலார்கோயில் வழியாக பாதயாத்திரையாக திருநன்றியூர் உலகநாயகி சமேத லட்சுமிபுரீஸ்வரர் கோவிலில் சொக்கநாத பெருமானை எழுந்தருளச் செய்தார்.

    12-ம் தேதி மாலை திருநன்றியூரில் இருந்து புறப்பட்டு வைத்தீஸ்வர ன்கோயில் வைத்தியநா தசுவாமி கோயிலில் சொக்கநாத பெருமானுன் எழுந்தருளினார்.

    அங்கு இரண்டு நாட்கள் தங்கி வழிபாடு நடத்திய பின்னர் நேற்று அங்கிருந்து சீர்காழி புறப்பட்டது.

    சீர்காழி நகர எல்லையான உப்பனாற்றாங்கரை வந்தடைந்த குரு லிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் மேடையில் எழுந்தருளினார்.

    100 நாதஸ்வர,மேளம் இசைத்தும், கேரள பாரம்பரிய தெய்வ வேடமணிந்து பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகைபுரிந்து வரவேற்றனர். பின்னர் யானை, ஒட்டகம், குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல தருமபுரம் ஆதீனம் சொக்கநாதர் பெருமானுடன் முக்கிய வீதிகளின் வழியாக பாதயா த்திரை மேற்கொண்டார்.

    பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் ஆதீனம் வழங்கியவாறு சென்றார். நான்கு தேர் வீதிகளின் வழியாக சட்டநாதர் சுவாமி கோயிலை தருமபுரம் ஆதினம் வந்தடைந்து அங்கு மாசிலாமணி நிலையத்தில் சொக்கநாதர் பெருமானை எழுந்தருள செய்தார். இதில் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்காவசகதம்பிரான் சுவாமிகள், சிவகுருநாத தம்பிரான்சுவாமிகள், ஆதீன கல்லூரி நிர்வாகத்தினர், சீர்காழி, வைத்தீஸ்வர ன்கோயில் பகுதி பக்தர்கள் உட்பட பலர் சென்றனர்.

    • பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
    • கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார்.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நின்று கொண்டிருந்த இவருக்கு சொந்தமான பசுமாடு நடந்து செல்லும் போது கொல்லைபுர த்திலிருந்த பழமையான 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அதனை மீட்க முயற்சித்த நிலையில் பசு மாட்டை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆழமான பாழும் கிணற்றில் இறங்கி இரண்டு மணி நேரம் போராடி சாதுர்யமாக பசு மாட்டை பாதுகாப்பாக மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டுக் கொடுத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.

    • சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.
    • விரைவில் தாமரை குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக விளங்கும் தாமரைக்குளம் சிதிலமடைந்து உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    அங்கு சுற்றுச்சுவர் இடிந்து காணப்படுவதால், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் அங்கு நேரில் ஆய்வு செய்து, விரைவில் தாமரைக் குளம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து

    விடப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×