ஆன்மிக களஞ்சியம்

ஆடியில் மறக்காமல் செய்ய வேண்டியவை

Published On 2024-07-16 11:28 GMT   |   Update On 2024-07-16 11:28 GMT
  • தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல.
  • அதில் மகத்துவம் நிறைந்துள்ளது.

புனித நீராடல், தானம், தர்ப்பணம்

சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப் படுகிறது.

கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

பொதுவாக ஆடி அமா வாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கி யத்துவம் பெறுகின்றன. அவை....

1. புனித நீராடல்

2. தானம்

3. தர்ப்பணம்

இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.

இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டு களாக தீர்த்தங்களின் புனிதம் ேபாற்றப்பட்டு வருகிறது.

தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டு மொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.

பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும்.

எனவே நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.

இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

Tags:    

Similar News