ஆன்மிக களஞ்சியம்
- பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் திருமண யோகம் முதலான பலன்களை அடையலாம்.
- அம்மனுக்கு புளிப்பு இல்லாமலேயே பட்சணங்கள் செய்யப்படுகின்றன.
ஸ்தல வரலாறு:
விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீசந்தோஷி மாதா கோவிலில் வெள்ளை நிற பளிங்கு கல்லால் அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத பௌர்ணமி நாளன்றும், விநாயகர் சதுர்த்தியன்றும் இங்கு சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி தினங்களிலும் அன்னையை நினைத்து பயபக்தியுடன் விரதமிருப்பது சகோதரயோகத்தை அளிக்கும். குறிப்பாக பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் திருமண யோகம் முதலான பலன்களை அடையலாம்.
ஆதிபராசக்தியின் அம்சமான இத் தேவியை நினைத்து வெள்ளிக்கிழமைகளில் விரதமிருக்க நினைத்தக் காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை, இந்த அம்மனுக்கு புளிப்பு இல்லாமலேயே பட்சணங்கள் செய்யப்படுகின்றன.