ஆன்மிக களஞ்சியம்

வாராகி நவராத்திரி

Published On 2023-07-03 10:46 GMT   |   Update On 2023-07-03 10:46 GMT
  • நம்முடைய அனைத்து துன்பங்களையும் நம்மிடமிருந்து அகற்றி வாராகி அம்மன் நம்மைக் காப்பாள்.
  • வாராகி நமக்குச் செய்யும் நன்மைகள் அனைத்தையும் வணங்குபவர்களுக்கு இவளும் செய்வாள்.

அம்பிகைக்கு உரிய நான்கு நவராத்திரிகளுள், வாராகி நவராத்திரியும் ஓன்று. ஆடி அமாவாசைக்கு முன் வரும் ஓன்பது நாட்களில் இது கொண்டாடப்படும்.

வாராகி பன்றி முகம் கொண்டவள் இவளை வழிபட உகந்த நாட்கள் அஷ்டமி, பெளர்ணமி நள்ளிரவு, கார்த்திகை வளர்மிறை பஞ்சமி போன்ற நாட்கள் வாராகி தேவியானவள் லலிதாம்பிகையின் சேனைத் தலைவி.

நம்முடைய அனைத்து துன்பங்களையும் நம்மிடமிருந்து அகற்றி வாராகி அம்மன் நம்மைக் காப்பாள்.

வாராகி தேவி பூண்டு, வெங்காயம் கண்டிப்பாகச் சேர்த்து தயாரித்து படைத்து வணங்க வேண்டும். தன்னை பக்தியுடன் வணங்குவோரின் பயத்தைப் போக்கி நன்கு வாழ வைப்பாள்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி வாராகி அம்சமானவள். வாராகி நமக்குச் செய்யும் நன்மைகள் அனைத்தையும் வணங்குபவர்களுக்கு இவளும் செய்வாள்.

வாராகி நவராத்திரி 9 நாட்களும் அவள் முன் நெய் விளக்கேற்றி, பூச்சூட்டி,பொட்டிட்டு, தூபம் காட்டி நைவேத்யம் செய்து அம்மனின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

பஞ்சமி, தண்டநாதா சங்கேதா, சமயேஸ்வரி, சமயங்கேதா, போத்திரிணி, வாராகி, ஷிவா, வார்த்தாளி, வாராகமுகி, மகாசோபனா, ஆஞ்ஞா சக்ரேஸ்வரி, அரிக்னி என்ற இத் திருநாமங்களை ஜபித்தபடி அர்ச்சனை செய்ய வேண்டும்.

இப்படிச் செய்து வாராகியை வணங்கினால் நினைப்பது நடக்கும்.

Tags:    

Similar News

கருட வசனம்