ஆட்டோ டிப்ஸ்

தீவிர சோதனையில் 5-டோர் மஹிந்திரா தார்

Published On 2022-08-18 16:31 GMT   |   Update On 2022-08-18 16:31 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் 5-டோர் தார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
  • இதனை உறுதிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 5-டோர் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தோற்றத்தின் படி இந்த கார் ப்ரோடக்‌ஷன் வடிவம் பெற சில மாதங்கள் வரை இருக்கும் என்றே தெரிகிறது.


Photo Source: Instagram | moto._tourer

புதிய மஹிந்திரா தார் 5 டோர் வேரியண்ட் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் போர்ஸ் குர்கா 5-டோர் எஸ்யுவி மற்றும் மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் எஸ்யுவி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

மஹிந்திரா தார் 5-டோர் எஸ்யுவி மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. காரின் ஒட்டுமொத்த எடை அதிகரிக்கும் என்பதால் தார் 5-டோர் மாடலில் 2.2 லிட்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, நான்கு சிலண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய தார் 3-டோர் மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News