ஆட்டோ டிப்ஸ்

XUV700 காரில் ஆப்பிள் கார் பிளே - சூப்பர் அப்டேட் கொடுக்கும் மஹிந்திரா

Published On 2022-08-25 11:56 GMT   |   Update On 2022-08-25 11:56 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய XUV700 மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • இந்த காரை டெலிவரி எடுப்பதற்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே அம்சம் வழங்குவது பற்றி முக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் மஹிந்திரா XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் அக்டோபர் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாடு முழுக்க இயங்கி வரும் எந்த விற்பனை மையத்திற்கு சென்றாலும் XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே வசதியை பெற முடியும். இந்த அம்சம் கொண்டு மேம்பட்ட சிரி சப்போர்ட், கார் பிளே நேவிகேஷன் மற்றும் பல்வேறு வசதிகளை பெறலாம்.

புதிய மஹிந்திரா XUV700 மாடல் கடந்த மாதம் தான் விற்பனையில் 1.50 லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருந்தது. இந்த காலக்கட்டத்தில் கார் வேரியண்டில் உள்ள அம்சங்களை மாற்றியமைக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வந்தது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் MX, AX3, AX5 மற்றும் AX7 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் மஹிந்திரா XUV700 மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News