இது புதுசு

டெஸ்டிங்கின் போது சிக்கிய 2023 ஹூண்டாய் i20N லைன்

Published On 2022-12-29 10:46 GMT   |   Update On 2022-12-29 10:46 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 i20N லைன் கார் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.
  • ஹூண்டாய் நிறுவனம் தற்போது கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் CNG வசதியை வழங்கி வருகிறது.

தென் கொரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களில் CNG ஆப்ஷனை வழங்கி வருகிறது. எனினும், மாருதி சுசுகி அளவுக்கு அதிக கார்களில் CNG வசதியை ஹூண்டாய் வழங்கவில்லை. 2023 ஏப்ரல் மாதம் முதல் புதிய புகை விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

புது விதிகளின் படி பெரும்பாலான 2.0 லிட்டருக்கும் குறைந்த திறன் கொண்ட என்ஜின்களில் மாற்றம் செய்ய வேண்டும். புதிய புகை விதிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படவில்லை எனில், அவற்றை கார்களில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இவ்வாறு மாற்றம் செய்யப்படாத 17 வாகனங்கள் விரைவில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் i20 N லைன் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஸ்பை வீடியோவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூண்டாய் i20 N லைன் மாடலில் - On Test By ARAI எனும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சோதனை செய்யப்படும் கார் ஒன்று CNG வேரியண்ட் ஆகவோ அல்லது புது விதிகளுக்கு பொருந்தும் மாற்றங்களுடனோ சோதனை செய்யப்படலாம்.

தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், CNG தொழில்நுட்பம் பெருமளவு வரவேற்பை பெற துவங்கி இருக்கிறது. எண்ட்ரி-லெவல் கார்களில் துவங்கி பிரீமியம் ஹேச்பேக், பிரீமியம் எம்பிவி மற்றும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களிலும் CNG ஆப்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரீமியம் ஹேச்பேக் பிரிவில் பலேனோ மற்றும் கிளான்சா மாடல்களில் இந்த ஆப்ஷ் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் i20 போன்ற கார்களும் இதே வழியை பின்பற்றும் என தெரிகிறது. ஹூண்டாய் i20 N லைன் மாடல் விசேஷ உபகரணங்களுடன் சோதனை செய்யப்படுகிறது. இதை அடுத்து இந்த கார் டர்போ என்ஜின் அல்லாத போட்டி நிறுவன கார்களுக்கு போட்டியாக களமிறக்க ஹூண்டாய் முடிவு செய்து இருக்கலாம் என தெரிகிறது.

Photo Courtesy: Cyrus Dhabhar

Tags:    

Similar News