இது புதுசு

அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான 2023 டாடா சஃபாரி

Published On 2023-02-25 09:53 GMT   |   Update On 2023-02-25 09:53 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சஃபாரி மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.
  • புதிய 2023 டாடா சஃபாரி மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 ஹேரியர் மாடலுடன் சஃபாரி மாடலையும் அறிமுகம் செய்தது. புதிய 2023 டாடா சஃபாரி மாடல் விலை ரூ. 15 லட்சத்து 65 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாடா சஃபாரி XE, XM, XMS, XT+, XZ மற்றும் XZ+ வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய 2023 டாடா சஃபாரி மாடலில் உள்ள என்ஜின் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ADAS அம்சங்களுடன், கூடுதலாக புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி ரெட் டார்க் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

 

2023 சஃபாரி மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் 2.0 லிட்டர் பிஎஸ்6 2 டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

வேரியண்ட்களை பொருத்து புதிய சஃபாரி மாடலில் 10.24 இன்ச் ஹார்மன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் வியூ சிஸ்டம், எலெக்ட்ரிக் டிரைவர் சீட், வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், மூட் லைட்னிங் வசதி வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு 2023 டாடா சஃபாரி மாடலில் ஆறு ஏர்பேக், எலெக்டிரானிக் பார்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, மேம்பட்ட ESP மற்றும் 17 அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ADAS அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சஃபாரி மாடல் டாப் எண்ட் விலை ரூ. 24 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News