இது புதுசு

இந்தியாவில் பிஎம்டபிள்யூ X6 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் - விலை ரூ. 1 கோடியே 11 லட்சம் தான்!

Published On 2022-10-29 10:19 GMT   |   Update On 2022-10-29 10:19 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் கார் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை ஸ்பெஷல் எடிஷன் கார்களை வெளியிட்டு கொண்டாடி வருகிறது.

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X6 ஜாரெ M எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X6 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 1 கோடியே 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பிஎம்டபிள்யூ X6 ஸ்டாண்டர்டு எடிஷனை விட ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.

ஜாரெ M எடிஷன் சீரிசில் ஒன்பதாவது மாடலாக புதிய X6 அறிமுகமாகி இருக்கிறது. X6 ஜாரெ M எடிஷன் மாடல் பிளாக் சபையர், M கார்பன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி மாடலில் கிளாஸ் பிளாக் நிற முன்புற கிரில், 20-இனஅச் பிளாக் M அலாய் வீல்கள், ரெட் நிற பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பொனெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ லோகோ M டிரீட்மெண்ட் பெற்றுள்ளது.

காரின் உள்புறம் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டெம்பரேச்சர் கண்ட்ரோல் வசதியுடன் கப் ஹோல்டர்கள், பவர்டு ஸ்போர்ட்ஸ் சீட்கள், சென்சாஃபின் இருக்கை மேற்கவர்கள், டகோரா ரெட் ஸ்டிச்சிங் போன்ற அம்சங்கள் உள்ளன. M ஸ்போர்ட் வெர்ஷனை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த காரில் M சார்ந்த அம்சங்களான M லெதர் ஸ்டீரிங் வீல், M ஸ்போர்ட் பிரேக்குகள், M ஸ்போர்ட் எக்சாஸ்ட் சிஸ்டம், அடாப்டிவ் M சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ஜினை பொருத்தவரை எவ்வித மாற்றமும் இன்றி 3.0 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 335 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

Tags:    

Similar News