இது புதுசு

இந்தியாவில் அறிமுகமான பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன்

Published On 2023-01-25 11:12 GMT   |   Update On 2023-01-25 11:12 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடல் N10 வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
  • புதிய பொலிரோ நியோ மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் எஸ்யுவி டாப் எண்ட் N10 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் ஸ்கை-ரேக், ஃபாக் லைட்கள், ஹெட்லேம்ப் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டீப் சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் கவர் வழங்கப்பட்டு இருக்கிறது.

காரின் உள்புறம் டூயல் டோன் ஃபௌக்ஸ் லெதர் இருக்கைகள், லம்பர் சப்போர்ட், ஒட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, சில்வர் ஆர்ம்-ரெஸ்ட் கொண்ட செண்டர் கன்சோல், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், புளூசென்ஸ் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

புதிய மஹிந்திரா பொலிரோ நியோ லிமிடெட் எடிஷன் மாடலிலும் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News