இது புதுசு

இந்தியாவில் அறிமுகமான மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG

Published On 2023-03-17 12:09 GMT   |   Update On 2023-03-17 12:09 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் பிரெஸ்ஸா மாடலை மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்கிறது.
  • புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனம் பிரெஸ்ஸா CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதய மாருதி சுசுகி பிரெஸ்ஸா விலை ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த எஸ்யுவி மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிரெஸ்ஸா CNG மாடல்- LXi, VXi, ZXi மற்றும் ZXi டூயல் டோன் என நான்குவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒட்டுமொத்த தோற்றத்தில் புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. காரின் வெளிப்புறத்திலும் CNG பேட்ஜ் எதுவும் இடம்பெறவில்லை.

 

பவர்டிரெயினை பொருத்தவரை பிரெஸ்ஸா CNG மாடல் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதே என்ஜின் எர்டிகா மற்றும் XL6 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 25.51 கிமீ வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

புதிய விலை விவரங்கள்:

மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG LXi ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம்

மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG VXi ரூ. 10 லட்சத்து 49 ஆயிரம்

மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG ZXi ரூ. 11 லட்சத்து 89 ஆயிரம்

மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG ZXi டூயல் டோன் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News