இது புதுசு

இரு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் பிரெஸ்ஸா CNG

Published On 2022-10-26 11:28 GMT   |   Update On 2022-10-26 11:28 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய பிரெஸ்ஸா எஸ்யுவி மாடல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் CNG கிட் கொண்ட கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பிரெஸ்ஸா எஸ்யுவி மாடலின் CNG வேரியண்டை மாருதி சுசுகி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யுவி-யின் CNG வெர்ஷனின் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் பற்றிய தகவல்கள் அந்நிறுவன வலைதளத்தில் இருந்தே லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கிறது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட முதல் CNG எஸ்யுவி என்ற பெருமையை மாருதி சுசுகி பிரெஸ்ஸா பெறும். இத்துடன் நாட்டின் முதல் ஆட்டோமேடிக் CNG பயணிகள் கார் என்ற பெருமையையும் பெறும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் CNG வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதை அடுத்து ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வாகன விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய பிரெஸ்ஸா மாடலிலும் 1.5 லிட்டர் NA என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இதே என்ஜின் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது.

Tags:    

Similar News