இது புதுசு

மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ Xtra இந்தியாவில் அறிமுகம்!

Published On 2022-12-30 10:57 GMT   |   Update On 2022-12-30 10:57 GMT
  • மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
  • புது லிமிடெட் எடிஷன் மாடலின் என்ஜின் மற்றும் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய எஸ் பிரெஸ்ஸோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் எஸ் பிரெஸ்ஸோ Xtra என அழைக்கப்படுகிறது. புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலின் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

வெளிப்புறம் புதிய எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் முன்புற ஸ்கிட் பிலேட், டோர் கிலாடிங், முன்புறம் அப்பர் கிரில், வீல் ஆர்ச் கிலாடிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் வழக்கமான எஸ் பிரெஸ்ஸோ மாடல் கிடைக்கும் அனைத்து நிறங்களிலும் கிடைக்கும் என தெரிகிறது. உள்புறம் ஆல் பிளாக் இண்டீரியர் தீம் செய்யப்பட்டு, புதிய இருக்கை கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் டோர் பேட், ஏசி வெண்ட், செண்டர் கன்சோல் மற்றும் புதிய கால் மிதி உள்ளிட்டவைகளில் காண்டிராஸ்ட் ரெட் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ Xtra மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட K10C பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News