இது புதுசு

நெக்சா பிராண்டிங்கில் முதல் CNG கார் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-11-01 09:09 GMT   |   Update On 2022-11-01 09:09 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் தனது XL6 காரில் S-CNG கிட் வழங்கி இருக்கிறது.
  • புதிய மாருதி சுசுகி XL6 S-CNG ஒற்றை வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது.

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 S-CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் ஸீட்டா MT எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே காருடன் பேலனோ CNG மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய XL6 S-CNG மாடல் லிட்டருக்கு 26.32 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், எல்இடி டிஆர்எல்கள், நான்கு ஏர்பேக், ESP மற்றும் ஹில் ஹோல்டு அம்சம், எல்இடி பாக் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மாதாந்திர சந்தா முறையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Tags:    

Similar News