இது புதுசு

இணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் Ai3 மைக்ரோ எஸ்யுவி ஸ்பை படம்!

Published On 2022-12-19 16:02 GMT   |   Update On 2022-12-19 16:02 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் வென்யூ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.
  • புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடலில் சன்ரூஃப் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய எஸ்யுவி மாடல் முதல் முறையாக கொரியாவில் ஸ்பை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் புதிய கார் அதன் ப்ரோடோடைப் வடிவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வெர்ஷன் இந்தியாவில் உருவாக்கப்பட்டு இங்கிருந்து கொரியாவில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹேச்பேக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மற்ற ஆட்டோ உற்பத்தியாளர்களை போன்றே ஹூண்டாய் நிறுவனமும் அனைத்து பிரிவுக்கும் ஏற்றவாரு எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இதுவரை பெயரிடப்படாமல் இருக்கும் ஹூண்டாய் எஸ்யுவி மாடல் கிராண்ட் i10 மாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் இது இந்திய சந்தையில் ஹூண்டாயின் மிகச் சிறிய எஸ்யுவி-யாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று தொடங்கும் முன்பு தான் இந்த காரின் உற்பத்தியை துவங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் செய்யப்படும் மாடலை பார்க்கும் போது, கேஸ்பர் மாடலை விட சற்று வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றெ தெரிகிறது. இதன் ஸ்டைலிங் முற்றிலும் வித்தியாசமாகவும், அதிக எஸ்யுவி பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது.

இந்த மைக்ரோ எஸ்யுவி மாடலில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், வென்யூ போன்ற ஹெட்லேம்ப் அதன் கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. டேடைம் ரன்னிங் லைட்கள் H வடிவம் கொண்டிருக்கின்றன. இதே போன்ற செட்டப் சாண்டா ஃபெ எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்களிலும் காணப்பட்டது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எல்இடி டிஆர்எல் ஆக இருக்கும் என தெரிகிறது.

பக்கவாட்டு பகுதிகளில் முன்புற ஃபெண்டர்கள் கேஸ்பர் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. பின்புறம் கதவு சற்றே உறுதியானதாகவும், டோப் ஹேண்டில் செவ்வக பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறம் சற்றே ஆங்குலர் டிசைன் கொண்ட டெயில் லேம்ப்கள், பின்புற பம்ப்பர் முற்றிலும் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. டாடா பன்ச் மற்றும் சிட்ரோயன் C3 மாடல்களை போன்றே இந்த காரிலும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களான சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

Source : Rushlane | 악군TV

Tags:    

Similar News