இது புதுசு

புதிய ரெட் டார்க் எடிஷன் - அசத்தல் டீசர் வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

Published On 2023-02-18 11:02 GMT   |   Update On 2023-02-18 11:02 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது கார்களின் ரெட் டார்க் எடிஷனை அறிமுகம் செய்கிறது.
  • புதிய ரெட் டார்க் எடிஷன் மாடல்களில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் ரெட் டார்க் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் புதிய கார்களின் டீசரை வெளியிட்டு உள்ளது. வரும் வாரங்களில் புதிய ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

டாடா நெக்சான், சஃபாரி மற்றும் ஹேரியர் ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் இதே கார்களின் டார்க் எடிஷனை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கார்களில் முழுக்க முழுக்க ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டு இருக்கும். புதிய கார்களில் சஃபாரி மற்றும் ஹேரியர் ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஒபெரான் பிளாக் நிறத்தில் கிடைக்கும் புதிய கார்களில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், முன்புற கிரில் பகுதியில் காண்டிராஸ்ட் நிற ஹைலைட்கள் செய்யப்படுகின்றன. இவைதவிர அலாய் வீல்கள் பிளாக்-ஸ்டோன் ஃபினிஷ் மற்றும் முன்புற ஃபெண்டர்களில் டார்க் பேட்ஜ் மற்றும் சிவப்பு நிற டிடெயிலிங் செய்யப்படுகிறது. காரின் கேபின் பகுதியில் ரெட் தீம் செய்யப்பட்டு இருக்கும்.

இந்த எடிஷன்களில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. சஃபாரி மற்றும் ஹேரியர் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது.

டாடா நெக்சான் மாடலும் ரெட் டார்க் எடிஷனாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அட்லஸ் பிளாக் பெயிண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல்கள் சார்கோல் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. நெக்சான் ரெட் டார்க் மாடலில் ADAS அம்சங்கள் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

Tags:    

Similar News