இது புதுசு

கோப்புப்படம் 

விரைவில் இரு CNG கார்களை அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்

Published On 2023-01-20 11:08 GMT   |   Update On 2023-01-20 11:08 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது கார் வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் டாடா நிறுவனம் தனது புதிய CNG கார்களை காட்சிப்படுத்தி இருந்தது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG வெர்ஷன்களை காட்சிக்கு வைத்து இருந்தது. இரு மாடல்களும் இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டியாகோ, டிகோர் மற்றும் டியாகோ NRG போன்ற கார்களின் CNG வெர்ஷன்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த பட்டியலில் அல்ட்ரோஸ் மற்றும் பன்ச் CNG வெர்ஷன்கள் இணை இருக்கின்றன. இதன் CNG வேரியண்டில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் பெட்ரோல் மோடில் 86 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் 77 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய டாடா அல்ட்ரோஸ் CNG மற்றும் பன்ச் CNG மாடல்களை நேரடியாக CNG மோடில் இருந்தே ஸ்டார்ட் செய்ய முடியும். வழக்கமாக கார்களின் பெட்ரோல் வேரியண்ட் உடன் ஒப்பிடும், CNG வெர்ஷனில் பூட் ஸ்பேஸ் குறைவாக இருக்கும்.

எனினும், டாடா நிறுவனம் கண்டறிந்து இருக்கும் டுவின்-சிலிண்டர் முறையில், 60 லிட்டர் கியாஸ் டேன்க் வழங்கப்படுகிறது. அதன்படி காரின் பூட் ஸ்பேஸ் பாதிக்கப்படாது. பூட்லிட் மீது i-CNG பேட்ஜ் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் இண்டீரியர் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறது. இரு கார்களில் அல்ட்ரோஸ் மாடல் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கும்.

இந்திய சந்தையில் அல்ட்ரோஸ் CNG மாடல் பலேனோ CNG மற்றும் கிளான்சா CNG மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடலில் ரியர் ஏசி வெண்ட்கள், முன்புறம் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியுடன் டிரைவர் சீட், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய டாடா பன்ச் CNG மாடலுக்கு போட்டியாக இதுவரை எந்த மாடலும் சந்தையில் கிடைக்கவில்லை. எனினும், ஹூண்டாய் நிறுவனம் இந்த நிலையை மாற்றும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த மாடலில் CNG பவர்டிரெயின் ஆப்ஷன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News