கிரிக்கெட் (Cricket)
அதிவிரைவில் 150 விக்கெட்: ரஷித் கானின் மற்றொரு சாதனை
- ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
கிங்ஸ்டவுன்:
கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.
ரஷித் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
150 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார்.
வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.