கிரிக்கெட் (Cricket)

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி- 194 கிலோ எடையை தூக்கி 2ம் இடத்தை பிடித்தார் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி

Published On 2023-05-07 22:58 GMT   |   Update On 2023-05-07 22:58 GMT
  • ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கினார்.
  • சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தை பிடித்தார்.

தென் கொரியா நாட்டில் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிந்தியாராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதில் ஸ்டாட்ச் பிரிவில் 83 கிலோ எடை, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ எடை என ஒட்டுமொத்தமாக 194 கிலோ எடையை தூக்கி பிந்தியாராணி தேவி அசத்தினார்.

மேலும் இந்த போட்டியில் சீனாவைச் சேர்ந்த சென் குவாங் லிங்(90 மற்றும் 114 கிலோ எடை) முதல் இடத்தையும், வியட்நாமைச் சேர்ந்த க்யூநுஹு (88 மற்றும் 104 கிலோ எடை) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Tags:    

Similar News