கிரிக்கெட் (Cricket)

டி20 பிளாஸ்ட் தொடரில் சூப்பர்மேனாக பறந்து கேட்ச் பிடித்த இங்கிலாந்து வீரர் - குவியும் பாராட்டுக்கள்

Published On 2023-06-17 19:49 GMT   |   Update On 2023-06-17 19:49 GMT
  • அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி கர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

லண்டன்:

நடப்பு ஆண்டின் டி20 பிளாஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சசக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் ஹாக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹேம்ப்ஷைர் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சசக்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஆலிவர் கார்ட்டர் 64 ரன்னும், ரவி போபரா 30 ரன்னும், மைக்கேல் பர்கஸ் 26 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு ஹேம்ப்ஷர் அணி ஆடியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து ஹேம்ப்ஷர் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லியான் டாசன் அரைசதம் அடித்து 59 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ வேதர்லி 33 ரன்னும், பென்னி ஹோவல் 25 ரன்னும் எடுத்தனர்.

இந்நிலையில், சசக்ஸ் அணியின் வீரர் டைமல் மில்ஸ் வீசிய 14-வது ஓவரின் 5-வது பந்தில் பென்னி ஹோவல் சிக்சர் அடிக்க முயற்சித்தார். டீப் ஸ்கொயர் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி வேகமாக ஓடி வந்து பறந்து சென்று ஒரு கையால் பந்தைத் தாவிப் பிடித்து லியான் டாசனை ஆட்டமிழக்க செய்தார்.

அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி கர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News