கிரிக்கெட் (Cricket)

இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்

Published On 2022-11-04 08:49 GMT   |   Update On 2022-11-04 08:49 GMT
  • இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என பாபர் அசாம் கூறியுள்ளார்.
  • அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரது கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இம்ரான்கான் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை டி20 போட்டியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர்அசாம் தனது 'டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான் மீதான இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்' என பதிவு செய்துள்ளார்.

இதேபோல முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது 'டுவிட்டர் பக்கத்தில், வஜிராபாத்தில் நடந்த நிகழ்வை நினைத்து கவலையடைகிறேன். இம்ரான்பாய் மற்றும் அங்குள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்று பட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்க கூடாது' என்று கூறியுள்ளார்.

இதேபோல முஸ்தாக் அகமது, உமர்குல், வகாப் ரியாஸ், சோயப்அக்தர், முகமது ஹபீஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இம்ரான்கான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News