கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா, கில் அவுட் - தேநீர் இடைவேளை வரை இந்தியா 37/2

Published On 2023-06-08 14:19 GMT   |   Update On 2023-06-08 14:19 GMT
  • இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மான் கில் விரைவில் அவுட்டாகினர்.
  • ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

லண்டன்:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ரோகித் சர்மா, சுப்மான் கில் அதிரடியாக தொடங்கினர். ரோகித் சர்மா 15 ரன்னிலும், சுப்மான் கில் 13 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுக்கு 37 ரன்களை எடுத்துள்ளது. புஜார் 3 ரன்னும், விராட் கோலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News