கிரிக்கெட் (Cricket)
null

லெஜண்ட்ஸ் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

Published On 2024-07-14 02:43 GMT   |   Update On 2024-07-14 02:44 GMT
  • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.
  • இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா மற்றும் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் உத்தப்பா 10 ரன்னிலும் சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனை தொடர்ந்து அம்பதி ராயுடு மற்றும் குர்கீரத் சிங் மான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பதி ராயுடு அரை சதம் விளாசி அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் குர்கீரத் சிங் மான் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த யூசப் பதான் அதிரடியாக விளையாடினார். அவர் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 19.1 ஒவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 50 ரன்னும், யூசுப் பதான் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அம்பதி ராயுடுவும் தொடர் நாயகனாக யூசப் பதானும் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News