ரோகித், கோலி, சூர்யகுமார் யாதவ் அரை சதம்- நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- சூர்ய குமார் யாதவ் 25 பந்தில் அரை சதம் அடித்தார்.
- விராட் கோலி 44 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
சிட்னி:
20 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மாவும் லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கேஎல் ராகுல் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்தனர்.