கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

Published On 2023-06-07 09:06 GMT   |   Update On 2023-06-07 09:21 GMT
  • உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.
  • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

லண்டன்:

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லாபுசேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஸ்காட் போலண்ட்

Tags:    

Similar News