கிரிக்கெட் (Cricket)
null

பெங்களூர் அணி வெளியேற்றம்- சோகத்துடன் காணப்பட்ட விராட் கோலி

Published On 2023-05-22 05:55 GMT   |   Update On 2023-05-22 07:57 GMT
  • பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
  • ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது.

பெங்களூர்:

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்றது.

வெற்றிபெற வேண்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோற்றதால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் 61 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 101 ரன் எடுத்தார். தொடர்ச்சியாக 2 சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐ.பி.எல்.லில் 7 சதம் அடித்து சாதனை புரிந்தார்.

விராட்கோலியின் இந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் வீரர் சுப்மன்கில் செஞ்சூரி அடித்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்து பெங்களூரை வெளியேற்றினார்.


பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது. அவரால் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.

மற்ற போட்டிகள் முடிந்த பிறகு இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசி சிரித்த விராட் கோலி, இந்த போட்டி முடிந்த பிறகு சோகமாகவே காணப்பட்டார். குஜராத் அணி வீரர்கள் கோலியிடம் ஜெர்சியில் ஆட்டோகிராப் கேட்டனர். ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அவர் சோகத்துடனே காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தரும் விதமாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சீசனில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 ஆட்டத்தில் 639 ரன் குவித்துள்ளார். 2 போட்டியில் அவுட் ஆகாததால் சராசரி 53.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 139.82 ஆக உள்ளது. இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்துள்ளார்.

Tags:    

Similar News