கிரிக்கெட் (Cricket)

மழை.. ரிசர்வ் டே.. டோனி.. எதிர்பார்ப்பை எகிற வைத்த ஐபிஎல் இறுதிப்போட்டி

Published On 2023-05-29 12:07 GMT   |   Update On 2023-05-29 12:07 GMT
  • டோனியின் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
  • 350 ஒருநாள் போட்டிகள் வரையில் டோனி விளையாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்தார். அதோடு ஆசியா கோப்பையை 2 முறையும், பார்டர் கவாஸ்கர் டிராபியையும் 3 முறையும் வென்று கொடுத்துள்ளார்.

கடந்த 200-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பிறகு 350 ஒருநாள் போட்டிகள் வரையில் விளையாடியுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி மான்செஸ்டரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்தது. அதன்பிறகு போட்டி அடுத்தநாள் தொடங்கப்பட்டது. இதில், நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் டோனி 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டில் வெளியேறினார். இந்த போட்டி முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அன்று நடந்தது போன்று இன்றும் நடந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், தொடர்ந்து கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று மாற்றுப்பட்டுள்ளது. இது டோனியின் 250-வது ஐபிஎல் போட்டி ஆகும்.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியும் ரிசர்வ் நாளாக செல்வதைக் கண்டு, சென்னை அணி தோல்வியடைந்து விடுமோ, ஐபிஎல்லில் டோனி பேட் செய்வது இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்று ரசிகர்கள் பயப்படுகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இறுதிப்போட்டியில் டோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி பெற்று அடுத்த ஆண்டும் தொடரும் எனவும் கூறிவருகின்றனர். இது குறித்தான விவாவதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News