கிரிக்கெட் (Cricket)

அடுத்த ஏலத்தில் ரோகித், பாண்ட்யா தேவையில்லை.. மும்பைக்கு இந்த 2 வீரர்களே போதும் - சேவாக் தடாலடி

Published On 2024-05-17 11:37 GMT   |   Update On 2024-05-17 11:37 GMT
  • ரோகித் சர்மா ஒரு சதமடித்தார் மும்பை தோற்றது.
  • இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை.

மும்பை:

17-வது ஐ.பி.எல். தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வரை கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த சீசனில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணம் என கருத்துக்கள்  வந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி களற்றிவிட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் ஆகியோர் ஒரு படத்தில் நடித்திருந்தால் அது வெற்றி பெறுமா என்பதை என்னிடம் சொல்லுங்கள்? கண்டிப்பாக கிடையாது. நீங்கள் அதற்கு நன்றாக செயல்பட வேண்டும். உங்களுக்கு நல்ல கதை வேண்டும். அதேபோல நட்சத்திர வீரர்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டும் போதாது. நன்றாக செயல்பட வேண்டும்.

 ரோகித் சர்மா ஒரு சதமடித்தார். ஆனால் அந்த போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. மற்ற போட்டிகளில் அவருடைய செயல்பாடுகள் எங்கே? இஷான் கிஷன் மொத்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியும் பவர் பிளே ஓவர்களை தாண்டவில்லை. தற்போதைய நிலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே முக்கியமானவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களை தவிர்த்து அடுத்த வருடம் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் மற்ற அனைத்து வீரர்களையும் மும்பை கழற்றி விட வேண்டும்.

இவ்வாறு சேவாக் கூறினார்.

Tags:    

Similar News