கிரிக்கெட்

பாபர் அசாம், ஆகா சல்மான் சதத்தால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன்னில் ஆல் அவுட்

Published On 2022-12-27 09:03 GMT   |   Update On 2022-12-27 09:03 GMT
  • நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் சதம் அடித்தார்.

கராச்சி:

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார்.

86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடனும் (277 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஹா சல்மான் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பாபர் அசாம் அவுட் ஆனார். அவர் 161 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் செளதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Tags:    

Similar News