கிரிக்கெட் (Cricket)

டாஸ் வென்று சரியான முடிவை தேர்வு செய்த கம்மின்ஸ்

Published On 2023-11-19 16:41 GMT   |   Update On 2023-11-19 16:41 GMT
  • முதல் 10 ஓவருக்குப்பின் பேட்டிங் செய்ய ஆடுகளம் கடினமான அமைந்தது.
  • 2-வது பேட்டிங் செய்ய எளிதாக அமைந்ததால், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டி தொடங்குவதற்கு முன், டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அப்போது, கம்மின்ஸ் தவறான முடிவை எடுத்துவிட்டார். இந்தியா அதிக ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை சுருட்டிவிடும் என விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சந்தோசத்தில் இருந்தனர். ஆனால், முதல் பேட்டிங்கின்போது 10 ஓவருக்குப்பின் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 240 ரன்களே அடிக்க முடிந்தது.

2-வது பேட்டிங்கின்போது, ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லை. சற்று பனித்துளி இருந்ததால் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை. மேலும், பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்.

இதன் காரணமாக கம்மின்ஸ் ஆடுகளத்தை நன்றாக கணித்து, முதலில் பீல்டிங் தேர்வு செய்து, கோப்பையையும் தட்டிப்பறித்துவிட்டார்.

Tags:    

Similar News