கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை தொடரில் வரலாற்று சாதனை படைத்த பரூக்கி

Published On 2024-06-27 03:55 GMT   |   Update On 2024-06-27 03:55 GMT
  • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது.
  • தோல்வியடைந்தாலும் ஆப்கன் பந்துவீச்சாளர் பரூக்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்ஸி மற்றும் யான்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிஸா ஹென்றிக்ஸ் 29 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 23 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலகக்கோப்பை தொடரில் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்:-

17* - பசல்ஹக் பரூக்கி (ஆப்கானிஸ்தான், 2024)

16 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2021)

15 - அஜந்தா மெண்டிஸ் (இலங்கை, 2012)

15 - வனிந்து ஹசரங்க (இலங்கை, 2022)

15 - அர்ஷ்தீப் சிங் (இந்தியா, 2024)

Tags:    

Similar News