கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் அய்யர் 

அதிவேகமாக 1000 ரன்கள் - சாதனை பட்டியலில் இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர்

Published On 2022-07-23 10:01 GMT   |   Update On 2022-07-23 10:01 GMT
  • விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்துள்ளனர்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் 25 ஒருநாள் போட்டிகளில் 10 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட 11 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்:

வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரண் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 308 ரன் குவித்தது. 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி பந்தில் இந்த வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்ததன் மூலம் 2 சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை எடுத்துள்ளனர். தவான் மற்றும் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியுள்ளனர்.

அவர்களுக்கு அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளார். அவர் 25 போட்டிகளில் 1000 ரன்களை எடுத்துள்ளார். அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இணைந்துள்ளார். அவர் தனது 25-வது ஒருநாள் இன்னிங்சில் 1000 ரன்களை கடந்தார்.

ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக மிக வேகமாக 1000 ரன்களை கடந்தவர்கள் பட்டியல்:

விராட் கோலி – 24

ஷிகர் தவான் – 24

நவ்ஜோத் சிங் சித்து – 25

ஷ்ரேயாஸ் ஐயர் – 25

கேஎல் ராகுல் – 27

எம்எஸ் தோனி – 29

அம்பதி ராயுடு – 29

மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 11 போட்டிகளில் தலா 50 மேல் ரன்களை அடித்துள்ளார். இந்தியர்களில், நவ்ஜோத் சிங் சித்து மட்டுமே ஐயரை விட அதிக போட்டிகளில் 50-க்கு மேல் ரன்களை எடுத்துள்ளார்.

முதல் 25 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக 50+ ரன்கள்:-

12: நவ்ஜோத் சித்து

11: ஷ்ரேயாஸ் ஐயர்*

10: விராட் கோலி

09: ஷிகர் தவான்

ஷ்ரேயாஸ் ஐயர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 71, 65, 70, 53, 7, 80 மற்றும் 54 ரன்களை பதிவு செய்துள்ளார்.

Tags:    

Similar News